full screen background image
Search
Sunday 13 October 2024
  • :
  • :

என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம், ரசிகர்களிடம் – சூர்யா

என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம், ரசிகர்களிடம் – சூர்யா

தானா சேர்ந்த கூட்டம் PRE RELEASE EVENT :-

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நேற்று விக்னேஷ் சிவனாக அனிருத்தும் , அனிருத்தாக விக்னேஷ் சிவனும் VJ அஞ்சனா சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது போன்று பதில்களை கூறினார். VJ அஞ்சனா சந்திரன் அனிருதிடம் எப்பொது கல்யாணம் என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன். பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம் என்று கூறினார். VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக காதல் திருமனம் தான் என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அடுத்து VJ அஞ்சனா சந்திரன் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்விகளை கேட்பது போன்று அணிருதிடம் கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவன் கூறுவது போன்று அனிருத் பதில் அளித்தார். VJ அஞ்சனா சந்திரன் உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம் என்ற கேள்விக்கு அனிருத் கல்யாணமா அப்போ எங்களுக்கு கல்யாணம் நடக்கலையா ?? என்று நகைசுவையாக பதில் அளித்தார். அதற்கு விக்னேஷ் சிவன் அனிருத்தை பார்த்து சிரித்த படி இருந்தார். அடுத்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளினி VJ அஞ்சனா சந்திரன் அனிருத்திடம் உங்களுக்கு பிடித்த கதைநாயகி யார் ? என்று கேட்டதற்கு அனிருத் நயன்தாரா என்று அனிருத் கூறியதற்கு அடுத்த நோடியே அரங்கமே அதிர்ந்தது.

நடிகர் சூர்யா நிகச்சியில் பேசியது

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படபிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக தானா சேர்ந்த கூட்டம் இருக்கும். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் “ தானா சேர்ந்த கூட்டத்தை “ நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது. இப்படத்துக்கென எதிர்பார்ப்பை , கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்துகொண்டேன். இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார். நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலவிஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும் , என்ன நடந்தாலும் , அன்பாவே இருப்போம் என்று ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *