full screen background image
Search
Wednesday 12 February 2025
  • :
  • :

தாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல் – தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடிய பிரியாங்கா

தாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல் – தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடிய பிரியாங்கா

தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகர் பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் VIJAY SRI G எழுதியுள்ளார், இசையமைப்பாளர் LEANDER இசையமைக்க, RAJAPANDI ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சாருஹாசன், சரோஜா(கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் தாதா 87 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2018ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று படத்தின் 1 ST SINGLE TRACK ஆறடி ஆண்டவன் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *