தயாரிப்பாளர் சங்கம் எங்கள் வேலையை தடுக்கவேண்டாம் -Nadigar Sangam Protest
சென்னை டிச-18
தயாரிப்பாளர் சங்கம் தலைவர் மற்றும் நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ் நாடு புதுமுகம் நடிகர்களுக்கு வேலை வாய்ப்புக்களுக்காகவும் எந்த சங்கத்திலும் இல்லாதவர்களை(non members) வைத்து வேலை செய்வதை, கண்டித்தும் தமிழ்நாடு புதுமுக நடிகர்கள் சங்கத்தின் சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
புது முக நடிகர்கள் சங்கத்தின் தலைவர் கிச்சா ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் தமிழகமெங்குமிருந்து புதுமுக நடிகர்கள் 100 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தாயரிப்பாளர் சங்க நிர்வாககத்தின் எதிராக, கண்டன கோஷங்களை எழுப்பினர்….
புதுமுகம் நடிகர்களுக்கு தற்பொது உள்ள தயாரிப்பாளர்கள் எந்த சங்கத்திலும் இல்லாத நடிகளுக்கு வாய்ப்பு வழங்குவதைத் தவிர்த்து எங்கள் சங்கத்தில் உள்ள புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
1500 நபர்களுக்கு மேல் இருக்கும் புதுமுக நடிகர் சங்கத்தினர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் தாயரிப்பு சங்கத்தினர் ஈடுப்பட கூடாது .
பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் துனை நடிகர்களுடன் எந்த சங்கத்திலும் உரிப்பினர்களாக இல்லாதவர்களை குறைந்த சம்பளத்தில் அமர்த்தி எங்கள் சங்கத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுருத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்…..
பேட்டி:
கிச்சா ரமேஷ்
தலைவர்
தமிழ்நாடு புதுமுக நடிகர்கள் சங்கம்.