புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “ ரவி அப்புலு இயக்குகிறார்புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “ ரவி அப்புலு இயக்குகிறார்
புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும்
“ செயல் “
ரவி அப்புலு இயக்குகிறார்
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “
ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு – V.இளையராஜா
இசை – சித்தார்த்விபின்
எடிட்டிங் – R.நிர்மல்
பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில்
ஸ்டன்ட் – கன்னல் கண்ணன்
நடனம் – பாபா பாஸ்கர், ஜானி கலை – ஜான் பிரிட்டோ
தயாரிப்பு நிர்வாகம் – A.P.ரவி
தயாரிப்பு – C.R.ராஜன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். 15 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கும் படம் இது.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..
வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த ஹீரோ எதிர் பாராத விதமாக அடிக்க நேரிடுகிறது.இதனால் மார்கெட்டில் ரவுடி தண்டபாணியின் மீது மக்கள் வைத்திருந்த பயம் போய்விடுகிறது இதனால் அவன் மார்கெட்டை இழக்க நேரிடுகிறது. மீண்டும் அந்த மார்கெட்டை பிடிக்க வேண்டும் என்றால், ஹீரோவை அதே மார்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும் படி அடிக்க வேண்டும். ஹீரோவை மார்கெட்டில் வைத்து அடித்தால் மட்டுமே ரவுடி தண்டபாணியின் கைக்கு மார்கெட் கிடைக்கும்.
இந்த சூழலில் ரவுடி ஹீரோவை அடித்தானா? அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா ? மார்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதில் ஹீரோ செய்த ஒரு நல்ல செயல் அடுத்தவர்களையும் செய்ய தூண்டுகிற செயலாக இருக்கும்.இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் தருஷி ஹீரோ தன்னிடம் காதலை சொல்ல வரும் போதெல்லாம் அவர் செய்யக்கூடிய விஷயங்கள் அனைவரையும் கவரும். இதில் ரவுடிகளுக்கு குருவாக ஆடுகளம் ஜெயபாலன் மற்றும் ஓய்வு பெற்ற ரவுடிகளாக முன்டாசுப்பட்டி ராமதாஸும், சூப்பர்குட் சுப்ரமணியம் நடித்துள்ளனர். அதே மார்கெட்டுக்காக போட்டி போடும் ரவுடி கதாப்பாத்திரத்தில் தீனா நடித்துள்ளார். ரவுடிக்கு ஆலோசனை சொல்லும் முக்கிய பாத்திரத்தில் தீ பெட்டி கணேசன் நடித்துள்ளார்.ரவுடியின் அடாவடி மனைவியாக வினோதினி நடித்துள்ளார். ஹீரோவின் தாயாராக ரேணுகா நடித்துள்ளார்.