14 வயதே ஆன SRINIDHI VG, தன் முதல் படைப்பான “TANTALIZED” எனும் “INTERNATIONAL POP” பாடலை தானே எழுதி பாடியுள்ளார். இப்பாடல் இரு பாலினர்களுக்கிடையே தோன்றிய காதல் உணர்வு மற்றும் கருத்து வேறுபட்டால் சேரவும் முடியாமல் பிரியவும் மனம் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை பற்றியது. SRINIDHI, தன் 5 வயது முதலே POP பாடல்கள் மேல் கொண்ட ஈர்ப்பினால், தான் ஒரு பாடகராக வேண்டுமென்று ஆசை தோன்றியுள்ளது. பிற குழந்தைகளை போல் வெறும் ஆசையாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்க்கை லட்சியமாக கொண்டு தன் அபார திறமையுடன் கடினமாக உழைத்து தன் முதல் பாடாலை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார். பிரபல பாடகர் JUSTIN DREW BIEBER அவர்களை முன் உதாரணமாக கொண்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. தன் பாடல்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வாழ்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை கையால நம்பிக்கையூட்டும் வகையிலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.