full screen background image
Search
Wednesday 6 November 2024
  • :
  • :
Latest Update

Happy Talkies screening KUNGFU PANDA film at Satyam Cinemas for Orphans & Special Children by Round Table India and Ladies Circle India

Happy Talkies

Round Table India and Ladies Circle India present “Happy Talkies” a first of its kind event where nearly 5000 orphans and special children from homes forunderprivileged children from across Chennai will be taken out for movie day to Satyam Cinemas on November 18 and 19, 2017. The event is an initiative of Madras Coastal Round Table 162 and Madras Coastal Ladies Circle 135.

The two day movie event will have 2500 children simultaneously watching a movieper day in all 6 screens of Satyam cinemas, Royapettah for the first time. For the first time all six screens will simultaneously screen a single movie for underprivileged children. The children will be watching the Tamil dubbed version of the popular children’s animation movie, Kung Fu Panda 3. Speaking about the event Madras Coastal Round Table 162 (MCRT162) Chairman, Tabler Dinesh Kumar says, “An
event on this scale has not been attempted before and for us the most important thing is to ensure that the children have a wonderful experience.”

The children attending are from orphanages, homes for special children and underprivileged children from across Chennai and its surrounding areas. The children will be picked up and dropped back by us. The children will receive special T-shirts, a snack while they enjoy the movie and a nutritious packed lunch that will be provided by Chennai Food Bank. “Many of these children have not even watched a movie in a theatre, so a normal experience for many of us, is a special day of happiness for these children and we are happy that we are able to provide this experience to them,” says Chairperson Circler Bharani Balachandran of Madras Coastal Ladies Circle 135.

Round Table and Ladies Circle India are organisations who through their initiative ‘Freedom Through Education’ they are leading the goal of education of 1 million children across India by setting up sound infrastructure for the same. Over the past 10 years Round Table India and Ladies Circle India have built one classroom a day through their education support initiatives.

Till date we at MCRT 162 have built more than 36 classrooms at a cost of several crores. The classrooms’ details are:
 2 classrooms at Hutton Night School,
 5 classrooms at Padur Govt. School,
 4 class rooms at Natham Village, Kumbakkonam for Fire Victims
 2 classrooms ThanthaiPeriyar Govt. School, Puzhuthivakkam,
 8 schools affected by Tsunami were rebuilt
 3 classrooms at Government School, Porur
 6 Classrooms at SGRVV School, Ponneri
 4 classrooms at St. Thomas Matriculation School, Thandalam, which was
inaugurated in March of 2017.

For information contact
Nandini Reddy 9884015641 or M S Giridharan 9943052610 or write to happytalkies2017@gmail.com

“ஹேப்பி டாக்கீஸ்”

ஆதரவற்ற மற்றும் காப்பகங்களில் வசிக்கும் வருமையில் வாடும் சுமார் 5000 குழந்தைகள் சென்னை சத்யம் திரையரங்கில் குங் பு பான்டா 3 அனிமேஷன் திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர்.

முதல் முறையாக Round table India மற்றும் Ladies Circle India இணைந்து “ஹேப்பி டாக்கீஸ்” என்ற பெயரில் சென்னை, அதனை சுற்றியுள்ள இடங்களில் வாழும் ஆதரவற்ற மற்றும் காப்பகங்களில் வளரும் வருமையில்வாடும் குழந்தைகளுக்கு என இந்த திரைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நவம்பர் 18 , 19 ம் தேதிகளில் திரைப்படத்தைத் குழந்தைகள் கண்டு மகிழ்ந்தன. இந்த நிகழ்வானது, Madras Coastal Round Table 162 மற்றும் Madras Coastal Ladies Circle 135 ன் முயற்சியாகும்.

சத்யம் திரையரங்கில் உள்ள 6 திரைகளில் இரண்டு நாட்கள் திரையிட்ட குங் பு பான்டா 3 திரைப்படத்தை 2,500 குழந்தைகள் ஒரு நாளும், மறு நாள் 2,500 குழந்தைகளும் ஒரே நேரத்தில் பார்த்து மகிழ்ந்தனர். சத்யம் திரையரங்க வரலாற்றில் வருமையில்வாடுகிற குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக ஒரே நேரத்தில் 6 திரைகளில் திரைப்படம் திரையிட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

குழந்தைகளுக்கான புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படமான இந்த குங் பு பான்டா 3 தமிழில் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டன.

இது குறித்து, Madras Coastal Round Table 162 நிறுவனத்தின் தலைவர் தினேஷ் குமார் கூறுகையில், ஆதரவற்ற குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக இப்படி ஒரு நிகழ்ச்சியை இதற்கு முன் நடத்தியது இல்லை, இதுவே முதல் முறை. இதன் மூலம் இந்த குழந்தைகள் ஒரு அற்புதமான புதிய அனுபவத்தை பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றார்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட இந்த குழந்தைகளுக்கு புதிய துணிகள், காலை உணவு, ஊட்டசத்துடன் கூடிய மதிய உணவு ஆகியவற்றை Chennai Food Bank அமைப்பு செய்து கொடுத்தது.

மேலும், Madras Coastal Ladies Circle 135 ன் தலைவர் பரணி பாலச்சந்திரன் பேசுகையில், இந்த குழந்தைகள் இதற்கு முன் திரைப்படங்களை திரையரங்கில் மகிழ்ச்சியாக இப்படி ஒன்றாக அமர்ந்து பார்த்திருக்கமாட்டார்கள். இந்த குழந்தைகளுக்கு இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கும். இந்த நன்னாளில், இந்த குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒரு தருணத்தை ஏற்படுத்தி தந்ததில் மகிழ்சியடைவதாக பரணி பாலச்சந்திரன் கூறினார்.

Round Table India மற்றும் Ladies Circle India இணைந்து இந்தியா முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வியை சரியான உள்கட்டமைப்போடு மேம்படுத்துவதை இலக்காக வைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் Round Table India மற்றும் Ladies Circle India இணைந்து பல பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியும் தங்களின் கல்வி ஆதரவை அளித்து வருகிறது.

இது நாள் வரை Madras Coastal Round Table 162 ( MCRT 162 ) பல கோடி ரூபாய் செலவில் 36 வகுப்பறைகளை கட்டியுள்ளது.

◾ 2 வகுப்பறைகள், ஹட்டன் நைட் பள்ளி
◾ 5 வகுப்பறைகள், படூர் அரசு பள்ளி
◾ 4 வகுப்பறைகள், நத்தம் கிராமம், கும்பகோணம்
◾ 2 வகுப்பறைகள், தந்தை பெரியார் அரசு பள்ளி, புழுதிவாக்கம்
◾ சுனாமியால் பாதித்த 8 பள்ளிகள் புனரமைக்கப்பட்டுள்ளது
◾ 3 வகுப்பறைகள் , அரசு பள்ளி , போரூர்
◾ 6 வகுப்பறைகள், SGRVV பள்ளி, பொன்னேரி
◾ 4 வகுப்பறைகள், செயின்ட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி, தண்டலம், 2017 மார்ச் மாதத்தில் திறக்கப்பட்டவை

மேலும் தகவலுக்கு,
நந்தினி ரெட்டி 9884015641 அல்லது M S கிரிதரன் 9943052610 அல்லது happytalkies2017@gmail.com




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *