Oru Kadhai Sollattumaa,
Very few Indian have well and truly marked their stamp in the international arena in the field of arts. One very important name is the Acadamy Award winning Sound designer Resul Pookutty whose works are becoming a piece of brilliance all over the world. The sensational news is that the Oscar Award winner is all set to please us and give us altogether an entirely different experience as an actor. Directed by Prasad Prabhakarn this movie will have Resul Pookutty playing a sound designer who wants to record all the sounds in world famous Thrissur Pooram festival. This prestigious project is produced by Mr.Rajeev Panakal of ‘Palm Stone Multimedia’, who are one of the largest aggregators of Indian movies.
Speaking about this, director Prasad Prabhakaran says, “ I can proudly say this is a never before attempted concept. Pooram festival in Thrissur is the biggest festival in the Universe, attended by a million people every year. This festival happens for seven days in total. There are thousands of artists playing hundreds of instruments in the event and the atmosphere will be absolutely electric and totally magical. It has been Resul pookutty’s real life dream to record the sounds of Pooram live. This movie is about a sound designer who wants to capture the sounds of this festival in his mike and record it. To our delight and honour Legendary Resul Pookutty plays this sound designer role. This movie is titled ‘Oru Kadhai Sollattumaa’. I am so proud Resul Pookutty chose this script to making his acting debut. Capturing the entire festival, visually and it’s sounds, for a movie’s purpose was a monstrous challenge and I must accept that my team has pulled it off incredibly well. We started our meticulous planning and preparations four months before the shoot itself. Over 80 technicians from Hollywood and Bollywood worked tirelessly in capturing the sounds of Pooram live for our movie . The camera team have captured over 300 live performing artists using 22 cameras . This movie will be such an experience that one can watch it even with their eyes closed. The sounds and the narration will convey the festival, moods and the story so brilliantly. The music of the film is done by Rahul Raj and the lyrics were penned by Vairamuthu. This movie is made in four languages with Malayalam, Telugu and Hindi being the other three languages. I am so very excited about the outcome and can’t wait for the audience to witness the experience that we have achieved to bring out”.
The songs and trailer has been edited by Antony and songs were recorded in AR Rahman’s studio. The audio rights of the movie has been bagged by Sony Music and this News has become an additional endorsement for the world class music and sounds that is expected to decorate this film.
ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் “ஒரு கதை சொல்லட்டுமா”.
கலை துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிக சிலரே. அந்த மிக சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை . தற்பொழுதைய பரபரப்பு செய்தி, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருப்பது தான். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்த படத்தை ‘Palm Stone Multimedia’ ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குனர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ”இந்த படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி என உறுதியாக கூறுவேன். கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழா பல லட்சம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடும் விழாவாகும். ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா இது. ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசை கருவிகளை வாசிக்கும் அந்த சூழல் மேஜிக்காக இருக்கும். இந்த எல்லா ஒலிகளையும் ரெகார்ட் செய்ய ஆசைப்படும் ஒரு சவுண்ட் டிசைனராக ரஸூல் பூக்குட்டி நடித்துள்ளார். அவரது நிஜ வாழ்விலும் இது ஒரு நீண்ட நாள் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது . இப்படத்திற்கு ‘ஒரு கதை சொல்லட்டுமா’ என தலைப்பிட்டுள்ளோம். ரஸூல் அவர்கள் இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததில் எனக்கு மிகவும் பெருமை. முழு பூரம் திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. எனது அணி பெரும் பாடுபட்டு இந்த அசுர காரியத்தை வெற்றிகரமாக முடித்தது. படப்பிடிப்புக்கு நான்கு மாதங்கள் முன்பே தயார் பணிகளை தொடங்கிவிட்டோம். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த 80 மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளை ரெக்கோர் செய்யவதில் பணிபுரிந்தனர். 22 காமெராக்களை கொண்டு அந்த விழாவில் வசித்து அசத்திய 300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை படமாக்கியுள்ளோம் . கண் பார்வை இல்லாதவர்களும் கதையை உணர்ந்து ரசிக்கும் படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் ராஜ் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. எங்களது அசுர உழைப்பை மக்கள் கண்டு ரசித்து பாராட்டும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் ”
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை ஆண்டனி எடிட் செய்துள்ளார். இப்பட பாடல்கள் AR ரஹ்மான் அவர்களின் ஸ்டுடியோவில் ரெகார்ட் செய்யப்பட்டுள்ளது . இப்படத்தின் ஆடியோ உரிமையை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் உலகத்தர இசை தரத்திற்கு இந்த செய்தி மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.