அபிசரவணன் – ஸ்வேதா நடிக்கும்
“ கரிக்காட்டுக் குப்பம் “
பெண் இயக்குனர் J.M.நூர்ஜஹான் அறிமுகம்
ஆடியன்ஸ் கிளாப்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக J.M.நூர்ஜஹான் எழுதி இயக்கி, தயரிக்கும் படத்திற்கு “ கரிக்காட்டுக் குப்பம் “ என்று பெயரிட்டுள்ளனர். பெண்கள் இன்று அடுப்பங்கரையை விட்டு புதிய சிந்தனைகளுடன் எல்லாத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் முஸ்லீம் பெண்கள் பல்துறை வித்தகர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்த “ கரிக்காட்டுக் கும்பம் “ உருவாகிறது. சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் பத்து இடங்களில் முதலாவது இடமாகக் கருதப்படுவது தான் இந்த கரிக்காட்டுக் குப்பம் “ இந்த இடம் அமானுஷ்ய சக்திகள் கூடாரம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் ECR பகுதிகளில் அதிகளவு விபத்துக்கள், சுனாமி போன்ற பலி வாங்குதல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த உண்மையை அடிப்படையாக கொண்டு “ கரிக்காட்டுக் குப்பம் “ உருவாகிறது.
அபி சரவணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்வேதா நடிக்கிறார். இவர் விவேக் நடித்த “ நான் தான் பாலா “ படத்தின் நாயகியாக நடித்தவர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு – எட்வின் சகாய் / இசை – ஜான்பீட்டர்
நடனம் – லாரன்ஸ் சிவா / பாடல்கள் – சினேகன்
ஸ்டன்ட் – பயர் கார்த்திக்
படம் பற்றி இயக்குனர் J.M.நூர்ஜஹான் கூறியதவது..
இன்றைய இளைஞர்கள் கல்லூரி வாழ்கையை கடப்பதற்கு மும்பே காதல் என்கிற மாயையில் விழுந்து விடுகிறார்கள். தன் காதலியோடு ஊர் சுற்ற வேண்டுமென்று, வசதி படைத்தவர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளவும் பெற்றோர்களை வற்புறுத்தி பைக் வாங்கிக் கொள்கிறார்கள்.
பிள்ளைகளின் ஆசைக்காக கஷ்டப் பட்டுகடன் வாங்கி, வாங்கிக் கொடுத்த பைக்கில் காதளிகளோடும், பைக் ரேஸிலும் ஈடுபடுகிறார்கள். அப்படி ஒரு காதலனும், காதலியும் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால் காதலன் இறக்கிறான். தன் காதலியுடன் வாழ முடியாமல் நிராசையுடன் இறந்த அந்த ஆத்மாவின் நிலை என்ன ? என்பதை திகில் கலந்த படமாக “ கரிக்காட்டுக் குப்பம் “ உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் J.M.நூர்ஜஹான்