full screen background image
Search
Monday 17 November 2025
  • :
  • :
Latest Update

புது வருடம்.. புதிய பாதை ; விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..! – Updated

புது வருடம்.. புதிய பாதை ; விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..!

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.


இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் நவ-8ஆம் தேதி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

வரப்போகின்ற புது வருடத்தில் வெளியாகும் ‘மன்னர் வகையறா’ விமலின் திரையுலக பயணத்திற்கு புதிய பாதை போட்டுத்தரும் என்பதில் சந்தேகமே இல்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *