full screen background image
Search
Wednesday 12 February 2025
  • :
  • :

SATHYABAMA UNIVERSITY & ISRO CELEBRATED WORLD SPACE WEEK WITH TWO DAY SPACE MELA ​ on 5th and 6th of October 2017 at their University premises.

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ​

உலக விண்வெளி வார விழா​
விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி​
இஸ்ரோவுடன் இணைந்து நடத்தப்பட்டது

​​
விண்வெளி ஆய்வுகளை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச விண்வெளி வாரம் அக்டோபர் 4 முதல் 10 வரை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை சார்ந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்துடன் இணைந்து இந்த வருடம் சர்வதேச விண்வெளி வாரத்தை கொண்டாடியது.

தன்னுடைய முப்பதாவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, வரும் அக்டோபர் 5 மற்றும் 6 தினங்களில் இந்நிகழ்ச்சியைக் பிரம்மாண்ட அளவில் கொண்டாடுவதில் சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிகழ்ந்துள்ள பல்வேறு பயனுள்ள ஆய்வுகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு பறைசாற்றும் வகையில் விழாக்களம் அமைக்கப்பட்டு இருந்தது.​

சர்வதேச விண்வெளி வாரம் . நடப்பு ஆண்டில் தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் 22 இடங்களில் விண்வெளி கண்காட்சிகள் நடைபெறுகின்றன.தமிழகத்தில் சத்தியபாமா பல்கலையில் நடைபெற்ற கண்காட்சியில் 276 பள்ளிகள், 10 கல்லூரிகளைச் சேர்ந்த 6 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

​​
விண்வெளி வாரத்தையொட்டி700 மாணவர்கள் கலந்துகொண்ட பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, விநாடி வினா உள்ளிட்டவை நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெறும் ராக்கெட் ஏவும் நிகழ்வை காண வாய்ப்பு வழங்கப்படுகிறது.


விண்வெளி வார கொண்டாட்டங்களின் அம்சமாக மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விண்வெளிஉலா, விண்வெளிமாதிரி ஏவுகணைகள் மற்றும் கோள்களின் கண்காட்சி ஆகியனவும் விழாவை சிறப்பிக்க உள்ளன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விண்வெளி அராய்ச்சி சிறப்புகளை பரிமாற்றும் விழாவில் நடைபெறும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் நிகழும் விண்வெளி ஏவுகணை நிகழ்வினை காணும் வாய்ப்பு அறிவிக்கப்பட்டது.

சதீஷ் தவான் ஆய்வு மைய திட்ட இயக்குநர் கும்பகர்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சந்திராயன்-2 வரும் ஆண்டு ஜனவரிக்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது. முன்னதாக அனுப்பப்பட்டது சந்திரனை சுற்றித்தான் வந்தது. சந்திராயன்-2 சந்திரனிலேயே இறங்கி ஆய்வு செய்யும்” என்றார்.

​​
பெருமதிப்பிற்குரிய பல்கலைக் கழகத்தின் வேந்தர் திருமதி. ரெமிபாய் ஜேப்பியார் அவர்களின் முன்னிலையில் பல்கலைக்கழக துணை தலைவர் டாக்டர். மரிய ஜான்சன் அவர்கள் மற்றும் துணைஅதிபர் டாக்டர். மரிய ஜீனா ஜான்சன் அவர்களின் தலைமையில், தமிழகத்தின் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் மாண்புமிகு திரு. கே.எ. செங்கோட்டையன் அவர்கள் அக்டோபர் 5, 2017, காலை 10.00 மணியளவில் துவக்கிவைத்து, சிறப்புரையாற்றினார். துவக்க விழாவை மேலும் சிறப்பிக்க, சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குனர் பெருமதிப்பிற்குரிய டாக்டர். பி. குன்னிக்கிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.​

கண்காட்சியை இஸ்ரோ இயக்குநர் குண்ணிக்கிருஷ்ணன், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தனர். பல்கலை துணை அதிபர் மேரி ஜான்சன், இணைவேந்தர் மரியஜீனா ஜான்சன் உடனிருந்தனர்.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகமும்-விண்வெளி ஆராய்ச்சி மையம் இனைந்து நடத்திய விண்வெளி ஆராய்ச்சி வார விழாவின் ​

2-ம் நாள் நிகழ்ச்சியில் தமிழ் மொழி கலாச்சாரம் மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் பங்கேற்று ​
​​
​​
இந்திய விண்வெளித்துறையின் பெருமைகளையும், சாதனைகளையும் விவரித்து​ ​
சிறப்புரையாற்றினார்.​

விழாவை சிறப்பிக்க சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் திட்ட இயக்குனர் திரு. வி. கும்பகர்ணன் மற்றும் பொது மேலாளர் திரு. ஜி. கிரஹதுரை ​
சிறப்புரையாற்றினர். சத்யபாமா பல்கலைக் கழகத்தில் நடக்கும் இந்த மாபெரும் விண்வெளி ஆய்வு பரி மாற்றங்களுக்கு பொது மக்களும் அனுமதிக்கபபட்டனர். உடன் சத்தியபாமா பல்கலைக்கழக இணை அதிபர் மரியஜீனா ஜான்சன், துணை அதிபர் மரிய ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாணவர்களுடன் உரையாற்றிய அவர் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் நடைபெறும் நிகழ்வான செயற்க்கைகோள் விண்ணில் ஏவும் நிகழ்வை நேரில் காணும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

SATHYABAMA UNIVERSITY CELEBRATED WORLD SPACE WEEK
​TWO DAY SPACE MELA EVENT JOINT COLLABORATION WITH ISRO​

​​
World Space Week is celebrated every year from 4th October to 10th October to commemorate the exemplary achievements which have happened in space science since the launch of the first artificial satellite, Sputnik-1, on 4th October 1957. The continuing outcomes of the space programmes across the world have helped common man and technocrats reap the benefits.

To propagate the benefits of the Indian Science Programme to the nation, the Indian Space Research organization’s ( ISRO’s) Sathish Dhawan Space Centre ( SDSC) has collaborated with Sathyabama University to celebrate the World Space Week this year. As a part of its 30th year celebrations, Sathyabama University takes pride in joining hands with SDSC to organize the Space Mela on 5th and 6th of October 2017 at the University premises.​

The programme is organized to highlight to the school, college and University students the significant achievements that Indian Space Research Organization has witnessed. The two days event inaugurated by the Honourable State Minister for School Education, Sports and Youth Welfare, Shri. K.A. Sengottaiyan, in the august presence of the University Chancellor Smt. Remibai Jeppiaar. Environment studies will be a key focus area in the curriculum next year, said School Education Minister K.A. Sengottaiyan.

Dr. Marie Johnson, Vice President and Dr. Mariazeena Johnson, Pro Chancellor of Sathyabama University preside​d​
​over the inaugural ceremony and deliver​
ed​

the Presidential address.Initially
​t
he space walk programme was flagged off by the pro-chancellor and vice-president respectively of Sathyabama University, Mariazeena Johnson and Marie Johnson.The programme illuminated with the achievements of the Indian Space Programme ​
by the Director of SDSC Dr. P.Kunhikrishnan. and talked​
about the milestones of the space centre.
​ ​


Written Quiz, Design Competition, Extempore Speech, Drawing competition and Fancy dress competition with the theme of Space, Science and Technology organized for the school and college students participating in World Space Week celebrations at Sathyabama University. Space Walk, Video Show on Space related activities, Exhibition of ISRO launch vehicle and satellite models are the other highlighting events ready to be witnessed during the two days programme.

Attractive awards given to the winners. The winners of the Final Quiz will be honoured with a chance to witness the rocket launch from Mission Control Centre, Sriharikota. The two days event ​came to a​ close with a valedictory address delivered by the Honourable Minister of State for Tamil Official Language, Tamil Culture and Archaeology, Shri.K. Pandiarajan.

Shri.V. Kumbakarnan, Project Director, Sathish Dhawan Space Centre, delivered the Special address and Shri.G.Grahadurai, General Manager, RO, SDSC, delivered the keynote address. Sathyabama University and Sathish Dhawan Space Centre welcom​ed all who ​witnessed the achievements of Indian Space Programme.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *