full screen background image
Search
Tuesday 29 April 2025
  • :
  • :

Vizhithiru Movie Details

Horses for the courses is the basic formula for success. Director producer Meera Kathiravan for ever keen to practice the formula, comes out with the most opportunistic time to release ” Stay awake” the best track of his film ” Vizhithiru” in Dubai.

“I strongly believe that time determines every thin. Success is being at the right place at the right time and this opportunity to show case the best song of my film ” Stay awake” in Dubai Duty free Tennis Stadium in the occasion of The grand Natchathira kalai vizha , organised by the legendary Abhirami Ramanathan on 25th of November. What better place than a star night when the concept is ” Stay awake”. I was awaiting a big platform to launch this song and this opportunity came as a blessing in disguise. The timing would be perfect as i am confident that this song will find large space in coming new year eve. This will provide the much needed momentum to my “Vizhithiru” starring Krishna,Vidharth, Venkat Prabhu and Dhansika in the principle roles.we are planning the release later this year and the need to “stay awake” to recieve films of content is the primary responsibility of the audience” summed up Meera Kathiravan in a tone of confidence .

இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றும் தான் ஒரு செயலில் வெற்றி பெறுவதற்கு, அதுவும் திரையுலகில் நிலையான வெற்றி பெறுவதற்கு முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுகிறது…..அத்தகைய சிறப்பம்சங்களை பின்பற்றி வரும் இயக்குநர் – தயாரிப்பாளர் மீரா கதிரவன், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய ‘விழித்திரு’ படத்தின் ‘STAY AWAKE’ பாடலை துபாயில் மிக பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார்.

“என்னை பொறுத்தவரை நேரம் தான் இந்த உலகத்தில் எல்லாமுமாக இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி, திரையுலகின் மூத்த நபர் அபிராமி ராமநாதன் அவர்கள் துபாயில் ‘நட்சத்திர கலை விழா’ என்னும் விமர்சையான கலை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்…. ஒட்டுமொத்த துபாயும் அன்றிரவு நட்சத்திரங்களின் வருகையால் ‘விழித்திரு’ க்கும் …. அப்படி ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியில் எங்களின் ‘விழித்திரு பாடலை வெளியிட வேண்டும் என்று தான் நான் பல நாட்கள் யோசித்து கொண்டிருந்தேன். தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது, எனக்கு கிடைத்த வரம். வருகின்ற புத்தாண்டு இரவில் அனைவராலும் கொண்டாடப்படும் பாடலாக எங்களின் ‘STAY AWAKE’ இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்….அதற்கு எங்களுக்கு கிடைத்த சரியான மேடை, இந்த ‘நட்சத்திர கலை விழா’ …. இதன் மூலம் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு மற்றும் தன்ஷிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் எங்களின் விழித்திரு திரைப்படம், எல்லாத் தரப்பு ரசிகர்களிடமும் பெரியளவில் போய் சேரும். இந்த ஆண்டு இறுதியில் நாங்கள் ‘விழித்திரு’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்…..தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை ‘விழித்திரு’ ந்து வரவேற்பது தான் ரசிகர்களின் கடமை….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் – இயக்குநர் மீரா கதிரவன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *