களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு
சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை முதல் முறையாக தமிழ் திரையில் பதிவு செய்தது இந்த திரைப்படம் ,ஆர்ப்பட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன் வெளியான இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான மூன்றாவது நாளில் இருபதுக்கும் மேல் திரையரங்கங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளது மேலும் வருகிற 29 வெள்ளி முதல் புதியதாக அறுபது அரங்கங்களிலும் வெளியாகிறது.
படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்களும்,ரசிகர்களும் படத்தின் இரண்டாம் பகுதியும் சற்று விறு விறுப்பாக இருந்து இருந்தால் மிகச்சிறந்த படமாக அமைந்திருக்கும் என்று கூறி இருக்கிறார்கள் , இதை உடனடியாக பரிசீலித்த படக்குழுவினர் இரண்டாம் பகுதியில் பதினைந்து நிமிட காட்சிகளை குறைத்து இருக்கிறார்கள், இந்த மாற்றம் இனிமேல் படம் பார்க்க வரும் ரசிகர்களை நூறு சதவீதம் திருப்திபடுத்ததும் என்று நம்பப்படுகிறது.