தமிழ் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியில் இணைய புதிய திரைப்படம் தயாராகி திரைக்கு வரவுள்ளது. படத்தின் பெயர் “எடக்கு”.
இதில் யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார்.
நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் K.பாலு இப்படத்தை தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன்.
இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் கூறியதாவது.
விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டப் படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் காட்சிகளை தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிறர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது.
மிக விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது “எடக்கு”. C.N.Kumar PRO