full screen background image
Search
Sunday 14 April 2024
  • :
  • :
Latest Update

மனதைக் கவரும் ஏராளமான பலன்களுடன் எல்ஐசி ஹெச்எஃப்எல் வழங்கும் வீட்டுக்கண்காட்சி ‘உங்கள் இல்லம்’

மனதைக் கவரும் ஏராளமான பலன்களுடன்
எல்ஐசி ஹெச்எஃப்எல் வழங்கும் வீட்டுக்கண்காட்சி
‘உங்கள் இல்லம்’
மனதைக் கவரும் ஏராளமான பலன்களுடன் நடைபெறும் மிகப்பெரும் வீட்டுக் கண்காட்சி.
சென்னை வர்த்தக மையத்தில் 2017 செப்டெம்பர் 15- ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை, 15 செப்டெம்பர் 2017 – ‘உங்கள் இல்லம் 2017’ என்னும் ப்ரத்யேக வீட்டுக் கண்காட்சியானது எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தினால் (LIC Housing Finance Ltd – LIC HFL) சென்னையில் நடத்தப்படுகிறது. 20-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் கண்காட்சியானது சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் ட்ரேட் சென்டரின் ஹால் எண் 1-ல், செப்டெம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

வீடு மற்றும் சொத்து கண்காட்சியான ‘உங்கள் இல்லம்’, 1997-ல் மிக எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய வீடு வாங்குவதற்கான வழிகாட்டுதல் கண்காட்சியில் 15 வீடு கட்டுமான நிறுவனங்கள் கலந்து கொண்டன. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வந்த அமோக வரவேற்பினால், ’உங்கள் இல்லம்’ கண்காட்சியானது, விரைவில் வாங்க திட்டமிட்டு வரும் மக்களிடம் அதிக எதிர்பார்பை உண்டாக்கி, அவர்கள் ஆவலுடன் பங்கேற்க எதிர்நோக்கியிருக்கும் ஒரு மாபெரும் கண்காட்சியாக உருவெடுத்து இருக்கிறது. மிகவும் சிறிய வீட்டு கண்காட்சியாக ஆரம்பித்த ‘உங்கள் இல்லம்’, கடந்த 20 வருடங்களாக சென்னையின் புகழ்பெற்ற 75-க்கும் அதிகமான வீடு கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கும் மிக முக்கியமான நிகழ்வாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

உங்கள் இல்லம் 2017’ கண்காட்சியை எல்ஐசி ஹெச்எஃப்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. விநய் ஷா அவர்கள், செப்டெம்பர் 15-ம் தேதி, நண்பகல் 12 மணிக்கு தொடங்கி வைத்தார். நோவா லைஃப் ஸ்பேஸ் ப்ரைவேட் லிமிடெட், (Nova Life Space Pvt. Ltd) இக்கண்காட்சியின் டைட்டில் ஸ்பான்ஸராக திகழ்கிறது. மேலும் அமர்பிரகாஷ் டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (AmarprakashDevlopers Pvt. Ltd.), பிபிசிஎல் (.BBCL), லோகா டெவலப்பர் ப்ரைவேட் லிமிடெட் (Lokaa Developer Pvt. Ltd), மற்றும் ருத்ராக்‌ஷ் ஹவுஸிங் (Rudraksh Housing) ஆகிய நிறுவனங்கள் இக்கண்காட்சியின் கோல்ட் ஸ்பான்ஸர்களாகவும் பங்கேற்று இருக்கின்றன. இக்கண்காட்சியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி முற்றிலும் இலவசம்.

இக்கண்காட்சியின் போது எல்லோருக்கும் பொருத்தமான பட்ஜெட்டிலிலான வீடுகளில் இருந்து உயர்தர ஆடம்பர குடியிருப்புகளை கொண்ட 500 திட்டங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த மெகா கண்காட்சியின்போது சில பில்டர்கள் புதிதாக ப்ராஜெக்ட்களை ஆரம்பிக்கக்கூடும். விரைவில் வீடு வாங்கவேண்டுமென்று விரும்பும் மக்கள், கண்காட்சியில் அமையும் சிறந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள முடிவதோடு, இக்கண்காட்சியில் பங்குபெறும் பில்டர்கள் அளிக்கும் தள்ளுபடி சலுகைகளையும் பெற்று பலனடைய முடியும். இதோடு, வீடு வாங்க விரும்புபவர்களுக்கு, கண்காட்சி நடக்கும் அதே இடத்திலேயே எல்ஐசி ஹெச்எஃப்எல் நிறுவனம் அளிக்கும் கடனுதவிகளைப் எந்தவிதமான ப்ராசஸிங் கட்டணங்கள் இல்லாமல் பெறமுடியும். இது வீடு வாங்க விரும்புபவர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ற, பட்ஜெட்டுக்கு பொருத்தமான சொத்துக்களை வாங்க பெரிதும் உதவும். அதற்கான தொழில்நுட்ப சம்பந்தபட்ட வழிக்காட்டுதலை எல்ஐசி ஹெச்எஃப்எல் நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்குவார்கள். மேலும் மக்கள் கடனுதவியாக எவ்வளவு தொகை பெறமுடியுமென்பதை அறிந்து கொள்ளமுடிவதால், முழுவதையும் தெரிந்துகொண்டு தெளிவான முடிவுகளை எடுக்கமுடியும்.

’க்ரஹ ஸித்தி’ (Griha Siddhi) கடன் திட்டத்தின் கீழ், இந்நிறுவனம் தன்னுடைய அனைத்து வீட்டுக்கடனுதவி தயாரிப்புகளுக்கும் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் தவணையைச் செலுத்த அவகாசம் வழங்குகிறது. மிக குறைந்தபட்சமாக வட்டி விகிதங்கள் 8.35%-ல் இருந்து ஆரம்பிக்கிறது. முதன்முறையாக வீட்டு கடன் பெறுபவர்கள் ’பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா க்ரெடிட் லிங்க்ட் சப்ஸிடி ஸ்கீம்’ (Pradhan MantriAwasYojana Credit Linked Subsidy Scheme – CLSS) திட்டத்தின்கீழ் கூடுதல் பயன்களைப் பெறமுடியும். ஆயுதப்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையில் பணிப்புரிவோர் அல்லது பணிப்புரிந்து ஒய்வுப்பெற்றோருக்கு செப்டம்பர் 30-ம் தேதி 2017 வரை சிறப்பு வட்டி விகிததில், வீட்டுக்கடனுதவி வழங்கப்படும்.

எல்ஐசி ஹெச்எஃப்எல், கடனுதவி வழங்கும் பிரிவில் CAGR உடன் 14% என்ற அளவில் மிகவும் வலுவான வளர்ச்சியைக் காட்டியிருக்கிறது. 31.3.2017 வரையில் முடிவடைந்த ஆண்டில், இந்நிறுவனம் .41541 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 15% அதிக வளர்ச்சி ஆகும். இந்நிறுவனத்தின் வருவாயானது CAGR-ன் படி 16% வளர்ச்சியை எட்டியிருக்கிறது 2017-ம் ஆண்டின் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான லாபமானது, வரிக்குப் பின் .1931 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.. மேலும் 2018-ம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் கடனுதவி வழங்குவதில் மாபெரும் வளர்ச்சியாக 17% வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. கடனுதவி வழங்குதலில் மொத்தம் 1,47,051 கோடி ரூபாய் வழங்கியிருப்பதன் மூலமாக 15% வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்நிறுவனம் இந்தியா முழுவதிலும் பரவலாக 9000 சந்தைப்படுத்துதலுக்கான இடைத்தரகர்களைக் கொண்டிருக்கும் வலுவான நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தடைகள் இல்லாத இலவச சேவைகளை வழங்கி வருகிறது.

தெற்கு பிராந்தியமானது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியிருக்கிறது. இப்பிராந்தியத்தில் 46 சந்தைப்படுத்துதல் அலுவலகங்களையும், கடனுதவி வழங்கல் அதன் பிறகான பணிகளை மேற்கொள்ள 4 அலுவலகங்களையும் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 19 சந்தைப்படுத்துதல் அலுவலகங்கள் உள்ளன. தெற்கு பிராந்தியம் மட்டும் கடனுதவி வழங்குதலில் 22% பங்கினை பெற்றிருக்கிறது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் ஆரம்பம் முதல் 3 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி வழங்கியிருக்கிறது. 13-ம் தேதி மார்ச் 2017 உடன் முடிவடைந்த ஆண்டில் இப்பிராந்தியம் 7440 கோடி ரூபாய் கடனுதவி வழங்கியிருக்கிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *