இந்தியன் கியூ மாஸ்டர்ஸ் லீக் தொடரில் அரை இறுதிக்கு சென்னை ஸ்ட்ரைகர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது…
இந்தியன் க்யூ மாஸ்டர்ஸ் லீக் தொடர் அஹமதாபாத்தில் 19-ஆம் தேதி தொடங்கியது. இம்மாதம் 25-ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்த தொடரில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனின் சென்னை ஸ்டிரைக்கர்ஸ் அணி கலந்து கொண்டுள்ளது. இதேபோல் ஹைதராபாத் ஹஸ்ட்லர்ஸ், டெல்லி டான்ஸ், பெங்களூரு பட்டீஸ், குஜராத் கிங்ஸ் என மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன.
நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை ஸ்ட்ரைகர்ஸ் அணி ஹைதராபாத் ஹஸ்ட்லர்ஸ் அணியை 5-க்கு 0 என்ற புள்ளிக் கணக்கில் முற்றிலும் வீழ்த்தியது . இந்த வெற்றியின் மூலம் சென்னை ஸ்டிரைக்கர்ஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.போட்டியில் வெற்றிபெற்ற சென்னை ஸ்டிரைக்கர்ஸ் அணியின் வீரர்களுக்கு திருமதி பிரேமலதா விஜயகாந்த் பரிசு வழங்கி கௌரவித்தார். இத்தொடரின் அரை இறுதி போட்டி 24ம் தேதியும், இறுதி போட்டி 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.