‘Lik’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Pradeep Ranganathan, Krithi Shetty, Seeman, S J Suriyah, Yogi Babu, Gauri G Kishan, Sha Ra, Anandaraj, Malavika
Directed By : Vignesh Shivan
Music By : Anirudh Ravichandran
Produced By : Nayanthara, S.S. Lalit Kumar
Lik படம் ஒரு புதுசான ஐடியாவை மையமாக வைத்து எடுத்திருக்கும் காதல் கதை. 2040 காலகட்டத்தில் நடக்கும் இந்த கதைல, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற ஒரு அப்ளிகேஷன் எல்லாரோட காதல் வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கும். யாரை காதலிக்கணும், எவ்வளவு பொருத்தம், பிரியணும்னா என்ன செய்யணும் எல்லாத்தையும் இந்த அப்ளிகேஷன் தான் முடிவு பண்ணும்.
இந்த சூழ்நிலையில் கைபேசி பயன்படுத்தாத உலகத்தில் வளர்ந்த பிரதீப் ரங்கநாதன்,
சமூக வலைதளத்திலேயே வாழும் கிரித்தி ஷெட்டியை பார்த்து காதலிக்கிறார். இருவருக்கும் நட்பு காதலாக மாறும் போது அதே அப்ளிகேஷன் கொடுத்த தகவலால் அவங்க பிரிந்து போறாங்க. அப்புறம் காதலை நிரூபிக்க ஹீரோ போராடுறது தான் கதையின் மையம். மனித உணர்ச்சி முக்கியமா இல்ல தொழில்நுட்பமா என்ற கேள்வியையும் படம் முன்வைக்கிறது.
படத்தின் பெரிய பலம் இதோட கான்செப்ட். இப்போ இருக்குற டேட்டிங் ஆப்ஸ், சமூக வலைதளங்கள் எப்படி நம்ம வாழ்க்கையையே பாதிக்குது என்பதைக் கொண்டு போய் இன்னும் ஒரு லெவலுக்கு எடுத்துச் செஞ்சிருக்காங்க.
சில இடங்களில் இது ரொம்ப ரிலேட்டபிளா இருக்கும்.
நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் வழக்கம் போல எளிமையான பையன் கேரக்டரில் நல்லா பொருந்தியிருக்கார். காமெடி, எமோஷன் இரண்டையும் சரியாக பேலன்ஸ் பண்ணி படம் முழுக்க தாங்கி நிற்கிறார். கிரித்தி ஷெட்டி ஒரு சமூக வலைதளத்தில் மூழ்கி வாழும் பெண்ணாக சரியாக இருந்தாலும், அவருக்கு பெரிய ஸ்கோப் கிடைக்கலன்னு தோணும். எஸ் ஜே சூர்யா தனது எனர்ஜியால் படம் முழுக்க கவனத்தை ஈர்க்கிறார். சில காட்சிகளில் அவர் தான் ஹைலைட் மாதிரி இருக்கும். சீமான் தனது இயல்பான பேச்சு பாணியால் நல்ல ஒரு மெசேஜ் கொடுக்கிறார்.
டெக்னிக்கலா படம் நல்லா இருக்கு. ஒளிப்பதிவு கலர்புல்லா காட்சிகளை காட்டுகிறது. எதிர்கால சென்னை எப்படி இருக்கும் என்று ஒரு அளவுக்கு காட்ட முயற்சி பண்ணியிருக்காங்க. இசை ஓகே தான், சில பாடல்கள் கேட்க நல்லா இருக்கும் ஆனா பெரிசா மனதில் நிற்காது. பின்னணி இசை கமர்ஷியல் டச் கொடுக்குது.
ஆனா படத்துக்கு பெரிய குறை திரைக்கதை. ஐடியா நல்லா இருந்தாலும் அதை ஆழமா கொண்டு போகல. பல விஷயங்கள் மேல் மேல் மாதிரி மட்டும் தொட்டு போகுது. குறிப்பா அப்ளிகேஷன் எப்படி வேலை செய்கிறது, அதோட லாஜிக் என்னன்னு சரியாக விளக்கமில்லை. இரண்டாம் பாதி கொஞ்சம் நீளமா போகும் மாதிரி இருக்கும், சில இடங்களில் சலிப்பு வரும்.
எமோஷனல் கனெக்ஷனும் சில இடங்களில் குறைவா இருக்கும். காதல் கதை என்றாலும் அந்த உணர்ச்சி முழுசா தாக்கமா வராது. காமெடியும் எல்லா இடத்திலும் வேலை செய்யாது. சில நல்ல சிரிப்பு தரும் காட்சிகள் இருந்தாலும், பல இடங்களில் மிஸ் ஆகிறது.
இருந்தாலும் முழுக்க மோசமில்லை. கலர்புல்லான காட்சிகள், சில சுவாரஸ்யமான ஐடியாஸ், பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு இவையெல்லாம் படம் ஓடிக்கொண்டே போக உதவுகிறது.
மொத்தத்தில்,’Lik’ இளைஞர்களுக்கு பிடிக்கும் மாதிரி லைட்டா பார்த்து ரசிக்கலாம் என்ற அளவில் இருக்கும் ஒரு காதல் மற்றும் டெக்னாலஜி கலந்த படம்.


















