‘TN 2026’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Casting : Natty Natraj, Thambi Ramaiah, M. S. Bhaskar, Ilavarasu, Shrrita Rao, Chandini Tamilarasan, Yashika Anand Redin Kingsley
Directed By : Umapathy S. Ramaiah
Music By : Darbuka Siva
Produced By : Kannan Ravi Groups – Kannan Ravi
‘TN 2026’ வட மாநிலத்திலிருந்து பிழைப்புக்காக சென்னை வர்ற நட்டி நட்ராஜ் எதிர்பாராத விதமாக நடிகராகி, அங்கிருந்து பெரிய ஸ்டாராக உயர்கிறார். அவரை முழுக்க முழுக்க நம்பி வழி நடத்துறவர் தம்பி ராமையா. அவர் தான் நட்டியை அரசியலுக்கு கொண்டு வந்து 2026ல் முதல்வராக்கணும் என்று கனவு காட்டுகிறார். இந்த பயணத்தில் என்ன நடக்குது, இறுதியில் நட்டி எடுக்குற முடிவு என்ன என்பதுதான் கதை.
படத்தின் முக்கிய பலம் இதோட ஐடியா. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களை நையாண்டி செய்யும் விதம் பல இடங்களில் நன்றாக வேலை செய்கிறது. குறிப்பாக பல காட்சிகள் நமக்கு நிஜ வாழ்க்கை நடிகர்களையும் அரசியல் சம்பவங்களையும் நினைவுபடுத்தும். ஆனா யாரையும் நேரடியாக சொல்லாமல் சாமர்த்தியமாக காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது.
நடிப்பைப் பார்த்தா நட்டி நட்ராஜ் இந்த படத்தின் முதுகெலும்பு. ஒரு சாதாரண மனிதனாக இருந்து ஸ்டார் ஆகி, பின்னாடி அரசியல் மனநிலைக்கு மாறும் மாற்றத்தை நன்றாக காட்டியிருக்கார். தம்பி ராமையா எப்போதும் போல தனது அனுபவத்தால் படம் முழுக்க கலக்குறார். அவருடைய வசனங்களும் டைமிங்கும் படத்துக்கு பெரிய பலம். இருவருக்கும் இடையிலான காட்சிகள் நகைச்சுவையையும், சில இடங்களில் கருத்தையும் தருகிறது.
மற்ற நடிகர்கள் எல்லாம் கதைக்கு தேவையான அளவுக்கு வந்து போகிறார்கள். ஹீரோயின்கள் பெரிதாக தாக்கம் இல்லாம இருந்தாலும் கதையின் ஓட்டத்துக்கு உதவுகிறார்கள். ரெடின் கிங்ஸ்லி மாதிரி சிலர் வரும்போது சிரிப்பு தரும்.
டெக்னிக்கலா பார்த்தா ஒளிப்பதிவு நல்லா இருக்கு. காலகட்டங்கள் மாறும்போது அதற்கேற்ற மாதிரி காட்சிகளை வித்தியாசப்படுத்தியிருக்காங்க. இசை ஓகே, பின்னணி இசை காட்சிகளுக்கு செட் ஆகுது. எடிட்டிங் வேகமா படம் போக உதவுது.
ஆனா படத்துக்கு குறைகளும் இருக்கு. சில இடங்களில் லாஜிக் சரியாக இல்லாம இருக்கும். கதைக்கு ஒரு தெளிவான திசை இல்லாத மாதிரி சில சமயம் தோன்றும். அரசியல் விஷயங்களை ஆழமாக கேள்வி கேட்காமல் மேல் மேல் மாதிரி மட்டும் தொட்டு போயிருக்காங்க. அதனால் படம் சில இடங்களில் ஒரே மாதிரி சுழல்ற மாதிரி இருக்கும்.
இருந்தாலும் இந்த குறைகளை மறக்க வைக்கிற அளவுக்கு நகைச்சுவை வேலை செய்கிறது. வசனங்களில் இருக்கும் அரசியல் கிண்டல்கள் நல்ல சிரிப்பு தரும். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அரசியல் நையாண்டி படம் பார்க்கிற மாதிரி உணர்வு கிடைக்கும்.
மொத்தத்தில், ‘TN 2026’ சினிமா நடிகர்களின் அரசியல் ஆசை, அதை சுற்றி நடக்கும் விஷயங்களை லைட்டா எடுத்துக்கொண்டு சிரிச்சுக்கிட்டு பார்க்க முடியும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் படம். ஒருமுறை பார்க்கலாம் என்று சொல்லக்கூடிய படம்.






















