full screen background image
Search
Thursday 18 June 2026
  • :
  • :
Latest Update

‘Vowels’ திரைப்பட விமர்சனம்

‘Vowels’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Yugi Sethu, Chinni Jayanth, Raj Ayyappa, Samyuktha Vishwanathan, Nandu, Deepak Paramesh, Kajal Choudhary, Peter K, Sharath Ravi, Akshitha Bopaiah, Priyanka Chandrashekar, Bharath Bopanna, Vijetha Vashitha

Directed By : Dhilip Kumar, Hemanth Kumar, Sangeeth, Santhosh Ravi, Jagan Rajendran

Music By : Sarvanaa Subramaniam

Produced By : Riddhi Siddhi Films – Raju Sheregar

‘Vowels’ 5 விதமான உணர்வுகளை சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு இயக்குனர்கள் எடுத்திருக்கிறார்கள் ஆனால் எல்லாவற்றையும் இணைக்கும் ஒன்று காதல் தான்.

கதைகளில் ஒன்று காதலால் ஏற்படும் கொலை பற்றி பேசுகிறது மற்றொன்று ஆபத்தான பயணமும் அதன் விளைவுகளும் பற்றி சொல்லுகிறது இன்னொன்று உணர்வுப்பூர்வமான காதலை பேசுகிறது இன்னொரு கதை நம்பிக்கையின்மை மற்றும் சந்தேகத்தை மையமாகக் கொண்டது கடைசியாக கனவு மற்றும் மனஅழுத்தம் கலந்த சிக்கலான காதல் கதையாக வருகிறது. இப்படியாக காதலின் பல முகங்களை காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.

இந்த ஐந்து கதைகளில் எல்லாம் ஒரே அளவுக்கு தாக்கம் இல்லை. சில கதைகள் மிகவும் சாதாரணமாகவும் நீளமாகவும் போகிறது. குறிப்பாக சில இடங்களில் பாடல்கள் மற்றும் மொண்டாஜ்கள் அதிகமாக இருப்பதால் கதை சற்றே மெதுவாக நகரும் உணர்வு வருகிறது. சில கதைகள் என்ன சொல்ல வருகிறதென்றே தெளிவாக தெரியாமல் குழப்பமாக முடிகிறது.

இதில் யூகி சேது வரும் கதை தான் அதிகமாக கவனம் ஈர்க்கிறது. அவருடைய வசனங்களும் நகைச்சுவையும் அந்த கதைக்கு ஒரு உயிர் கொடுக்கிறது. சின்னி ஜெயந்த் வரும் காதல் பகுதியும் நன்றாக மனதில் பதிகிறது. சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் தீபக் பரமேஷ் நடித்த கதை சின்னதாக இருந்தாலும் ஒரு மென்மையான உணர்வை கொடுக்கிறது.

மற்ற சில கதைகள் காதலை விட வேறு விஷயங்களை அதிகமாக பேசுவது போல தோன்றுகிறது. குறிப்பாக ஒரு கதை ரோடு சேப்டி மெசேஜ் மாதிரி போய்விடுகிறது மற்றொரு கதை கனவு கனவாக நீள்ந்து சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இசை இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு கதையிலும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது அது சில இடங்களில் உணர்ச்சியை கூட்டினாலும் சில நேரங்களில் கதை சொல்லும் வேகத்தை குறைக்கிறது. ஒளிப்பதிவும் ஒவ்வொரு கதைக்கும் வித்தியாசமான தோற்றத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறது.

மொத்தத்தில், ‘Vowels’ காதலின் பல பரிமாணங்களை சொல்ல முயற்சி செய்திருப்பது நல்ல விஷயம். ஆனால் எல்லா கதைகளும் சமமாக தாக்கம் ஏற்படுத்தவில்லை என்பதே குறை. சில நல்ல தருணங்கள் இருந்தாலும் முழு படமாக பார்க்கும்போது கலவையான அனுபவத்தை தரும் படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *