full screen background image
Search
Sunday 13 October 2024
  • :
  • :

தீ காயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு டாக்டர்.கார்த்திக் ராமின் ‘காஸ்மோக்ளிட்ஸ்’ விருது – நடிகை ரோஹினி வழங்கினார்

தீ காயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு டாக்டர்.கார்த்திக் ராமின் ‘காஸ்மோக்ளிட்ஸ்’ விருது – நடிகை ரோஹினி வழங்கினார்

பிரபல பிலாஸ்டிக் சர்ஜரி மற்றும் உடல் எடை குறைப்பு மையமான ’சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி’ (Chennai Plastic Surgery) ‘காஸ்மோக்ளிட்ஸ் விருதுகள்’ (Cosmoglitz Awards) என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி வருகின்றது. 3ஆம் ஆண்டான இவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதில் தீ காயங்களால் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ‘பீனிக்ஸ் க்ளிட்ஸ்’ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை நடிகையும், இயக்குநருமான ரோஹினி வழங்கினார்.

இந்த 8 பெண்களும் முறையான பயிற்சி பெற்று சென்னை ராயபேட்டையில் உள்ள ரைட்டர்ஸ் கபேவில் பணிபுரிகிறார்கள். தங்கள் முகத்தில் ஏற்பட்ட தீ காயத்தால் பலரால் புறக்கணிப்பட்ட இவர்கள், அனைத்து தடைகளையும் எதிர்த்து போராடி, தற்போது சமூகத்தில் உயர்ந்துள்ள, பிரியதர்ஷினி, அஸ்மா, மாரியம்மாள், தமிழ்செல்வி, பரிமளா, புனிதவள்ளி, சத்யா, கோமலா என்ற இந்த 8 பெண்களை கவுரப்படுத்தும் விதமாக பீனிக்ஸ் க்ளிட்ஸ் விருது வழங்கப்பட்டது.

அதேபோல், 50 வயதில் தனது உடல் எடையில் 50 கிலோவை குறைத்து சாதித்த சென்னையைச் சேர்ந்த பெண்மணி திருமதி.சுஜாதா மோகனுக்கு ‘அவதார் க்ளிட்ஸ்’ விருது வழங்கப்பட்டது. இவர், எந்தவித மருந்தோ மாத்திரையோ பயன்படுத்தாமல், அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளாமல், தனது உடல் எடையை குறைத்துள்ளார். இவரது செயலை ஊக்குவிக்கும் நோக்கத்தில், சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி இவருக்கு இவ்விருதை வழங்கி கவுரப்படுத்தியது.

சென்னை பிளாஸ்டிக் சர்ஜரியில் உடல் உடை குறைப்பதற்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லாமல் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் தனது எடையில் 50 கிலோவை குறைத்த இந்த பெண்மணியை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், அவரை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் அவருக்கு இவ்விருதை வழங்கி கவுரவித்தனர்.

மேலும், மிஸ்டர்.கிளிட்ஸ் என்ற விருது மாடல் அபி பிரசாத்துக்கும், மிஸ்.க்ளிட்ஸ் விருது மாடல் அழகி மீரா மிதுனுக்கும் வழங்கப்பட்டது. மிஸ்சஸ்.க்ளிட்ஸ் விருது புனிதா கார்த்திக்குக்கும், மிஸ்டர்.பிரஸ் பேஸ் (Fresh Face) பல்கிட் பஜோரியாவுக்கும், மிஸ்.பிரஸ் பேஸ் (Fresh Face) ரேஸ்மா நம்பியார்க்கும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவிற்கு முன்பாக ’பேர் இஸ் நாட் ஆல்வேய்ஸ் லவ்லி’ (Fair is not always lovely) மற்றும் ’பாடி சேமிங் & இமேஜினெட் அக்லினஸ் சிண்ட்ரோம்’ (Body Shaming & Imagined Ugliness Syndrome) என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

அதாவது, கருப்பு மற்றும் மாநிறமாக இருப்பவர்கள் தங்களது வண்ணத்தை மாற்ற பல்வேறு நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது என்பது குறித்தும், அதேபோல், நமது உடல் எடை மற்றும் முக தோற்றம் உள்ளிட்டவையை வைத்து யாராவது கேலி கிண்டல் செய்தால், அதை கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டவையை குறித்து இந்த கருத்தரங்கில் தெளிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில், சமூக ஆர்வலர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உடல் எடை பராமரிப்பு மருத்துவர்கள் மற்றும் பேஷன் டிசைனர் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

மேலும், சுனிதா ராஜ் எழுதிய ‘லிப்போசக்ஸன் – தி பிக் ஃபேட் ஸ்டோரி’ (Liposuction – The Big Fat Story) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் பற்றியும், அவை எதனால் ஏற்படுகிறது மற்றும் அவற்றை கரைக்கும் யுக்தி உள்ளிட்ட தகவல்களை கொண்ட புத்தகமாகும். இந்த புத்தகத்தை இந்தியாவின் மூத்த மற்றும் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர். ஆர்.வெங்கடசுவாமி வெளியிட்டார். இந்திய பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் முன்னோடியான இவர் தான் டாக்டர் கார்த்திக் ராமின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.கார்த்திக் ராம் நிகழ்ச்சியில் பேசும் போது, “சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனை உடல் எடை பருமன், முடி உதிர்தல், பெண்கள் உடலில் திடீர் மாற்றம் போன்றவற்றுக்கு சிறப்பான முறையில் தீர்வு கண்டு வருகிறது. அத்துடன் சமூகத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உந்துதலாகவும் இருப்பவர்களை கவுரவிக்கும் விதத்தில் ‘காஸ்மோ க்ளிட்ஸ்’ விருதுகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு தீ காயங்களினால் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு விருதுகள் வழங்கியதைப் போல, அடுத்த ஆண்டு திருநங்கைகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கும் விருதுகள் வழங்குவதோடு, அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல் நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

2016 – 17 ஆம் ஆண்டில் மட்டும் 600 முதல் 700 காஸ்மடிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ள சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனை, அனைத்துவிதமான உடல் பாதிப்புகள், தோல் பிரச்சினைகள் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. இந்தியாவில் முன்னணி காஸ்மடிக் சர்ஜரி மையமாக திகழும் சென்னை பிளாஸ்டிக் சர்ஜரியில், இந்தியா மட்டும் இன்றி 67 நாடுகளில் இருந்து மக்கள் சிகிச்சைப் பெற்று வருகிறர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

———————————————————————————————————————————————————————————————————————————
Burn survivors honoured at COSMOGLITZ AWARDS, hosted by CHENNAI PLASTIC SURGERY

One of the renowned Cosmetic Surgery and Weight Loss centres in the city, ‘Chennai Plastic Surgery’ hosts the COSMOGLITZ AWARDS annually. The 3rd edition was held in a grand manner at Chennai recently. Ms.Rohini, a Social activist cum actress along with Prof. R.Venkataswami, Head – Apollo’s National Institute for Reconstructive Surgery, Microsurgery and Hand Surgery had given away the GLITZ PHOENIX award for a team of eight bold burn survivors.

All the burn survivors were formally trained and are currently working in ‘Writer’s Café’ that is located in Royapettah, Chennai. These 8 women were refused acceptance by many in the society earlier. Taking it up as as a challenge, Priyadarshini, Asma, Mariyammal, Tamil Selvi, Parimala, Punithavalli, Sathya and Komala have now strongly imprinted a name for themselves. As a gesture of respect for their self confidence, positivity and willingness to excel at work, they were honoured with the GLITZ PHOENIX awards.

Apart from these, ‘Chennai Plastic Surgery’ honoured Mrs.Sujatha Menon (50 years) with GLITZ AVATAR award in appreciation for having lost 50 Kgs over a period of 3.5 years and transforming herself, without going under the knife. She achieved it through proper diet and regular exercise, setting an example for many others who are fighting weight issues.


Other Awardees:
1. Mr. Glitz – Abhi Prasad
2. Ms. Glitz – Meera Mitun
3. Mrs. Glitz – Punitha Karthik
4. Mr. Fresh Face – Pulkit Bajoria
5. Ms. Fresh Face – Reshma Nambiar

The event was preceded by 2 panel discussions on two much needed topics ‘Fair is not always Lovely’ and ‘Body Shaming and Imagined Ugliness Syndrome’, organised by Chennai Plastic Surgery. The first panel discussed ‘Pros and Cons of improving skin colour through various treatments’ and the second panel on ‘Societal standards of colour & weight discrimination & how to overcome them’. It is to be noted that Social activists, Plastics Surgeons, Psychologists, Dieticians, Fashion Designers and Veterans from various departments participated in this conference.

Also, the book ‘Liposuction – The Big Fat Story’ written by Sunitha Raj was released in a grandeur way. ‘The big fat story’ that was released by India’s senior most Plastic Surgeon Prof. R.Venkataswami (Dr.Karthik Ram’s Mentor and Guru).

Dr. Karthik Ram, the founder of Chennai Plastic Surgery said “Chennai Plastic Surgery center has consistently provided solutions for obesity, hair and skin related issues. Apart from that, we are also encouraging people who are setting examples for others in the society through our COSMOGLITZ awards. Just like the burn survivors who were awarded this year, we propose to honour achievers from the transgender community next year. We are also planning a huge forum to enable them discuss the problems transgenders face in their day to day life”

Being one of the India’s top most Cosmetic Surgery centers, Chennai Plastic Surgery caters to clients from almost 67 countries. ‘Chennai Plastic Surgery’ has performed close to 600 – 700 Cosmetic Surgeries in the year 2016 – 2017 and needs a special mention.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *