சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே. அஹ்மத் அவர்களிடம் உதவியாளராக இளம் வயதில் தன் திரைப் பயணத்தை தொடங்கிய ஷேக், தற்போது பல படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக செயல்பட்டு வருகிறார்.
ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான், விஜய் நடித்த துப்பாக்கி, சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே மற்றும் எதிர் நீச்சல், ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல படங்களுக்கு உதவி பிஆர்ஓவாக பணியாற்றி அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை கொண்டு தற்போது பல படங்களுக்கு பிஆர்ஓவாக திறம்பட செயல்பட்டு வருகிறார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள கொம்பே, 13ஆம் நம்பர் வீடு, கூத்தன், திரிபுரம் உள்ளிட்ட படங்களுக்கு பிஆர்ஓவாக பணிபுரிந்து வருகிறார்.
பிஆர்ஓ ஷேக்கின் திரைப் பயணம் மென்மேலும் வளர, வாழ்த்துக்கிறோம்.