full screen background image
Search
Friday 23 January 2026
  • :
  • :
Latest Update

‘ராஜா சாப்’ திரைப்பட விமர்சனம்

‘ராஜா சாப்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Prabhas, Sanjay Dutt, Boman Irani, Malavika Mohanan, Nidhhi Agerwal, Riddhi Kumar, Zarina Wahab

Directed By : Maruthi

Music By : Thaman S

Produced By : People Media Factory, IVY Entertainment – TG Vishwa Prasad, Krithi Prasad

‘தி ராஜா சாப்’ – பிரபாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த ஹாரர்–ஃபேண்டஸி படம், அவருடைய கரியரில் ஒரு வித்தியாசமான முயற்சி. காமெடி, பயம், காதல், ஃபேண்டஸி எல்லாமே சேர்த்து ஒரு பெரிய எண்டர்டெய்னராக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இயக்குநர் மாருதிக்குத் தெளிவாக இருந்தாலும், திரையில் அது முழுமையாக வேலை செய்யவில்லை.

கதை ரொம்ப சிம்பிள். அல்சைமர் பாதிப்புள்ள பாட்டியை (ஜரீனா வஹாப்) பார்த்துக் கொள்ளும் ராஜு (பிரபாஸ்), தன் தாத்தா பற்றி உண்மையை தேடி ஹைதராபாத் வருகிறார். அப்போதுதான், தாத்தா இறந்த பிறகும் ஒரு ஆபத்தான ஆவியாக இருக்கிறார் என்ற அதிர்ச்சி உண்மை தெரிய வருகிறது. பேராசை, மனவிளையாட்டு, பழிவாங்கல் இதெல்லாம் சேர்ந்து கதை நகர்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபாஸ் முழுக்க காமெடிக்குள் இறங்கியிருப்பது ஒரு பிளஸ். சில சீன்களில் அவர் முயற்சி நன்றாக வேலை செய்கிறது, சத்யாவுடன் வரும் சில காமெடி தருணங்கள் சிரிக்க வைக்கின்றன. ஆனாலும், நிறைய இடங்களில் ஜோக்குகள் செட் ஆகாமல், காமெடி கட்டாயமா திணிக்கப்பட்ட மாதிரி தோன்றுகிறது.

[

ஜரீனா வஹாப் கேரக்டருக்கு எமோஷன் இருக்கிறது; அவர் நடித்துள்ள சில காட்சிகள் மனசை தொடுகிறது. சஞ்சய் தத் தனது ரோலில் தீவிரம் கொண்டு வருகிறார்; பிரபாஸுடன் வரும் மனவிளையாட்டு சீன்கள் படத்துக்கு கொஞ்சம் எடையைக் கொடுக்கின்றன. இரண்டாம் பாதியில் சில நல்ல தருணங்கள் இருக்கிறது – நிழல்களுடன் வரும் காட்சி, ஹாஸ்பிட்டல் சீன் போன்றவை.

ஆனா, மொத்தப் படத்துக்கு பெரிய பிரச்சனை என்னன்னா எழுத்து மற்றும் டோன். பயப்பட வேண்டிய இடத்தில் பயம் இல்லை, சீரியஸ் ஆக வேண்டிய இடத்தில் காமெடி வந்து கெடுக்கிறது. பேய் வீடு சீன்கள்ல கூட கேரக்டர்கள் டூருக்கு வந்த மாதிரி ரொம்ப சாதாரணமா நடந்து கொள்கிறார்கள். லீடிங் லேடீஸான மலவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் – மூவருக்கும் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமே இல்லை; பாடல்கள் கூட கதையின் ஓட்டத்தை கெடுக்கிறது.

படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுவது பெரிய மைனஸ். முதல் பாதி ரொம்ப சிதறலாகவும், இரண்டாம் பாதியும் மெதுவாகவும் செல்கிறது. எடிட்டிங் இன்னும் டைட்டாக இருந்திருக்க வேண்டும். தமன் பிஜிஎம் இடைவிடாமல் சத்தமாக வந்து, சீன்களின் எமோஷனை குறைத்துவிடுகிறது. விஎஃப்எக்ஸ், செட் வேலை எல்லாம் சராசரி மட்டுமே.

மொத்தத்தில், ‘தி ராஜா சாப்’ நல்ல ஐடியா இருந்தும், சரியான திரைக்கதை இல்லாததால் முழுமையாக கிளிக் ஆகாத படம். பிரபாஸ் முயற்சி நேர்மையானது, சில காட்சிகள் ரசிக்க வைக்கிறது; ஆனாலும் நீளம், டோன் குழப்பம், பலவீனமான எழுத்து காரணமாக படம் சோர்வாகிறது. கடைசியில் சீக்வல் டீசர் கூட ஆர்வத்தை விட ஒரு பயம்தான் தருகிறது.

நல்ல முயற்சி இருந்தாலும், சரியான திரைக்கதை இல்லாததால் ‘தி ராஜா சாப்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *