‘தேசிய தலைவர்‘ திரைப்பட ரேட்டிங்: 2/5
Casting : JM Basheer, Director Bharathiraja, Vagai Chandrasekar, Radha Ravi, RV Udhayakumar, MS Baskar
Directed By : R.Aravindraj
Music By : Ilayaraja
Produced By : SSR Sathya, Jenifer Margret
படம் ஆரம்பத்தில் இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் தான் கதையை ஜூனியர்களுக்கு சொல்லுவது போல் தொடங்குகிறது. அதன் பிறகு கதையோடு அந்த கால அரசியல் சூழல், தேவரின் வளர்ச்சி, அவர் எப்படி மக்கள் மனதில் இடம் பெற்றார் என்பதெல்லாம் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
தெற்கு கடைக் கோடி கிராமத்திலிருந்து ஒரு சாதாரண மனிதர், மாநிலத்தையும் தேசிய அரசியலையும் முடிவு செய்யும் அளவுக்கு உயர்கிறார் என்பதே படத்தின் மையக்கரு. அவர் காந்தி, நேரு, நேதாஜி, ராஜாஜி போன்ற தலைவர்களை சந்தித்தது, காங்கிரஸ் அரசியலில் இருந்ததும், பின்னர் எதிர் அணியில் இணைந்ததும் — எல்லாமே சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது.
அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியமான வழக்குகள், குறிப்பாக இம்மானுவேல் சேகரன் தொடர்பான சம்பவங்கள், சிறையில் இருந்து வெளியே வந்தது, பக்தியோடு வாழ்ந்தது போன்ற அம்சங்கள் அனைத்தும் நிதானமான பாணியில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
பஷீர் தேவராக நடித்துள்ளார். சில காட்சிகளில் அவருடைய ஒட்டுமீசை சிறிது பொருத்தமில்லாததாக இருந்தாலும், மற்ற காட்சிகளில் நன்றாகவே நடித்துள்ளார். ராதாரவி வழக்கறிஞராகவும், பாரதிராஜா நீதிபதியாகவும், எம்.எஸ். பாஸ்கர் சிறிய ரோலில் வந்து ஒளி சேர்த்துள்ளனர்.
தேசிய தலைவர்களாக நடித்த மற்ற நடிகர்களும் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளனர். வரலாற்று படமாக இருப்பதால், உண்மையை மாற்றாமல், சீராக எடுத்திருப்பது ஒரு பெரிய பாசிட்டிவ்.
இளையராஜா இசை, பின்னணி இசை இரண்டும் படத்தின் உணர்வை உயர்த்துகிறது. அகிலன் சியாலியின் ஒளிப்பதிவு அழகாகவும் சீராகவும் உள்ளது. அந்த காலத்தை உணர்த்தும் கலை இயக்கம் மிகவும் நம்பத்தகுந்ததாக உள்ளது.
சில இடங்களில் வேகம் குறைவாக இருக்கும், சிலர் மிகை நடிப்பும் தெரியும், ஆனால் படம் மொத்தத்தில் அந்தக் காலத்தையும் தலைவரின் சிந்தனைகளையும் நன்றாக வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில — “தேசிய தலைவர்” ஒரு மெதுவான, ஆனாலும் மனதில் பதியும் ஆவணப்பட மாதிரி உருவாக்கப்பட்ட படம். வரலாறு விரும்புபவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.











