full screen background image
Search
Wednesday 9 July 2025
  • :
  • :
Latest Update

‘பீனிக்ஸ்’ திரைப்பட விமர்சனம்

‘பீனிக்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast & Crew:
விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ஃபீனிக்ஸ் . அனல் அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனர் ரமேஷ், அபினக்ஷத்ரா, வர்ஷா, நவீன், ரிஷி, நந்தா சரவணன், முருகதாஸ், விக்னேஷ், ஸ்ரீஜித் ரவி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ஃபீனிக்ஸ் படத்தின் விமர்சனங்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

ஃபீனிக்ஸ் படத்தின் கதை
வடசென்னையை கதைக்களமாக கொண்டு ஏற்கனவே பல படங்களில் பேசப்பட்ட ஒரு கதையே ஃபீனிக்ஸ் படத்தின் கதையும். கதை வழக்கமானதாக இருந்தாலும் படத்தில் அனைவரையும் கவர்ந்திருப்பது ஆக்‌ஷன் காட்சிகள்தான். இப்படத்தின் பிரத்யேக காட்சி நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு படம் குறித்தும், சூர்யா சேதுபதியின் நடிப்பு குறித்தும் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

சூர்யா சேதுபதி, பீனிக்ஸ் வீழான் என்ற திரைப்படத்தில் செம அட்டகாசமாக நடித்திருப்பதாக விமர்சகர்கள் புகழ்ந்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாதியில் சூர்யாவுக்கு பெரிதாக வசனமே இல்லை. ஆனால் அவரது உடற்செயல் மற்றும் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக,சண்டை காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதியில் சூர்யாவுக்கு ஒரு வசனம் கூட இல்லை. ஆனால் ஆக்‌ஷன் காட்சிகள் என்று வரும்போது சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் ஆக்‌ஷன் காட்சியில் சூர்யா கடினமான ஆக்‌ஷன் காட்சிகளில் சூப்பராக நடித்துள்ளார்.

ஆனால், சண்டைக் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதைக்கும் திரைக்கதைக்கும் கொடுக்காமல் சுமார் மூஞ்சி குமாராகவே இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படம் ரசிகர்களை கவராத நிலையில், அதை விட கொஞ்சம் பெட்டராகவே இந்த படம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். Also Read – விஜய் சேதுபதி மகனை நேரில் அழைத்து வாழ்த்திய விஜய்!.. வைரல் போட்டோ!… வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, முத்துக்குமார், ஹரிஷ் உத்தமன் என மற்ற பிரபல நடிகர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

முதல் பாதி முழுக்க சில வார்த்தைகளை தவிர ஹீரோவின் வாயில் இருந்து எதுவுமே வரவில்லை. கை மட்டும் தான் பேசும் என படம் முழுக்க சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் சூர்யா சேதுபதி.ஆக மொத்தம் ஃபீனிக்ஸ் படத்தின் கதை திரைக்கதை சுமாராக இருந்தாலும் தனது ஆக்‌ஷன் காட்சிகளால் ரசிகர்களை கவர்கிறார்கள் படத்தின் நாயகன் சூர்யா மற்றும் இயக்குநர் அனல் அரசு.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *