full screen background image
Search
Wednesday 9 July 2025
  • :
  • :
Latest Update

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 – இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது !

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 – இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது ! புதிய சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், ஜூன் 20 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

ஹாட்ஸ்டார் மலையாள ஸ்பெஷல் வெப் சீரிஸ் வகையில், முதல் படைப்பாக பெரும் வரவேற்ப்பை பெற்ற கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீரிஸின், பெரிதும் எதிர்பார்க்கபடும் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சீரிஸின் அதிரடியான இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், வரும் ஜூன் 20ஆம் தேதி முதல், இரண்டாவது சீசன் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 தி சர்ச் ஃபார் CPO அம்பிலிராஜு எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த புதிய சீசன், ஒரு சிவில் போலீஸ் அதிகாரியான அம்பிலி ராஜு காணாமல் போன, மர்ம வழக்கை அடிப்படையாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 1 நிமிடம் 30 விநாடிகள் கொண்ட இரண்டாவது டிரெய்லர், கதையின் களத்தையும் அதன் தீவிரதன்மையையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அஹம்மது கபீர் இயக்கியுள்ள இந்த சீரிஸின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை பஹுல் ரமேஷ் எழுதியுள்ளார். ஹாசன் ரஷீத், அஹம்மது கபீர் மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஆகியோர் மங்கீ பிசினஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்த சீரிஸை தயாரித்துள்ளனர்.

இந்த சீரிஸில் அர்ஜுன் ராதாகிருஷ்ணன், அஜு வர்கீஸ், லால், இந்திரன்ஸ், ஹரிச்ரீ அசோகன், ரெஞ்சித் சேகர், சஞ்சு சனிசென், சுரேஷ் பாபு, நவாஸ் வல்லிக்குன்னு, நூரின் ஷெரீஃப், ஜியோ பேபி, ஷிப்லா ஃபாரா, பிலாஸ் சந்திரஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸுக்கு, ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேஷ் புவனேந்திரன் எடிட்டிங் செய்துள்ளார், ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இந்த அதிரடி திரில்லர் சீரிஸுன் இரண்டாவது சீசன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி என ஏழு இந்திய மொழிகளில் ஜூன் 20 முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

🔗https://www.youtube.com/watch?v=3j9tDsk2xco




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *