full screen background image
Search
Tuesday 10 February 2026
  • :
  • :
Latest Update

இலங்கை தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம் “தீப்பந்தம்”!

இலங்கை தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம் “தீப்பந்தம்”!

சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ‘தீப்பந்தம்’ திரைப்படம் திரையுலக பிரமுகர்கள், பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு திரையிடப்பட்டது!

படவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வ.கௌதமன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், ஓவியர்
மருது, ஓவியர் புகழேந்தி, இயக்குனர்கள் கவிதா பாரதி, ராசி அழகப்பன், நடிகர் முத்துக்காளை, இயக்குனர்கள் கேந்திரன் முனியசாமி,
அஜயன் பாலா, மாணவர்கள் நகலகம் சவுரி ராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டு, படத்தை பாராட்டி பேசினார்கள்!

இயக்குநர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில், தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை
மதிசுதா, கில்மன், கஜன் தாஸ்,
ஆகாஷ், நஜாத்.கே, எல்,பிரகாஷ், கஜன் விஜயநாதன், கதிர்சினி,
சபேசன், ஆர்.கே.கஜா உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீப்பந்தம்’.

இப்படத்தின் கதையை பூவன் மதீசன் எழுதியிருக்கிறார். ராஜ் சிவராஜ், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.

ஏ.கே.கமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பூவன் மதீசன் இசை அமைத்துள்ளார்.
பாடல்களை வேலணையூர் சுரேஷ், கே.எஸ்.சாந்தகுமார், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
படத்தொகுப்பை அருண் யோகதாசனும், கலை இயக்கத்தை வி.எஸ்.சிந்துவும் கையாண்டுள்ளனர். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

அம்லுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ப்ளக்போர்ட் இன்டர்நேசனல் நிறுவனம் வழங்குகிறது.

மே 31 ஆம் தேதி இலங்கை முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் குறித்து இயக்குநர் ராஜ்சிவராஜ் கூறியதாவது….

ஐம்பதுகளில் பிறந்த ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாக கொண்டு இந்தப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. அவர் வாழ்க்கை வழியாக தமிழர் உரிமைப் போராட்டங்கள், செயல்பாடுகள் ஆகியனவற்றையும் அதற்கான மூல காரணங்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் திரைக்கதை அமைத்து, ஓர் உணர்வுப்பூர்வமான வாழ்வை ஆவணப்படுத்தியுள்ளோம். அதை திரைப்படங்களுக்கே உரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து கொடுத்திருக்கிறோம். இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நெருக்கம் கொடுக்கும் படைப்பாக இருக்கும். பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

@GovindarajPro




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *