’தக் லைஃப்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Casting : Kamal Haasan, Silambarasan, Trisha Krishnan, Abhirami, Joju George, Nazar, Ashok Selvan, Bagavathi Perumal, Aishwarya Lakshmi
Directed By : Mani Ratnam
Music By : AR Rahman
Produced By : Raaj Kamal Films International, Madras Talkies, Red Giant Movies – Kamal Haasan, R. Mahendran, Mani Ratnam, Siva Ananth, Udhayanidhi Stalin
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல். தற்போது கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கியிருக்கிறார். 38 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தில் கமலஹாசன் டெல்லியில் தாதாவாக இருக்கிறார். இவருக்கும் தாதா மகேஷ் என்பவருக்கும் இடையே தான் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த தாதா கேங்கை அழிக்க போலீஸ் திட்டமிடுகிறது. இதனால் போலீசுக்கும் கமலுக்கும் இடையே நடந்த தகராறில் சிம்புவுனுடைய அப்பா கொல்லப்படுகிறார். சின்ன வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து சிம்பு அனாதையாக நிற்கிறார். அதோடு அந்த பிரச்சனையில் தன்னுடைய தங்கையையும் விட்டு பிரிகிறார் சிம்பு.
அதற்குப் பின்னால் கமலஹாசன், சிம்புவை எடுத்து வளர்க்கிறார். தன்னுடைய சாம்ராஜ்யத்தின் அடுத்த அரசனாக சிம்புவை ஆக்க கமல் நினைக்கிறார். இதற்கிடையில் கமலஹாசனை கொள்ளவும் சதி நடக்கிறது.
அதற்குப்பின் தனக்கடுத்து சிம்பு தான் என்று எல்லோரிடமும் கமல் சொல்கிறார். அந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக கமலஹாசன் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதில் கமலஹாசன் அடிபட்டு ஹாஸ்பிடலும் இருக்கிறார். ஆனால், இதை சிம்பு தான் செய்ய சொன்னார் என்று கமல் தவறாக புரிந்து கொள்கிறார்.
இதையெல்லாம் அறிந்த சிம்பு மனம் உடைந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் சிம்புவே கமலஹாசனை கொல்லவும் நினைக்கிறார். இதை அறிந்த தாதா குரூப், சிம்புவையும் கமலையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். சிம்புவும் கமலை கொல்ல ஆக்ரோஷமாக திட்டமெல்லாம் போடுகிறார். இறுதியில் சிம்புவின் சதி திட்டம் பலித்ததா? கமலஹாசனுக்கு என்ன ஆனது? மற்ற தாதாக்களின் எண்ணம் நிறைவேறியதா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தில் நடிகர் கமலஹாசன் அவர்கள் தாதாவாக மிரட்டி இருக்கிறார். உடல் மொழியிலும், பேச்சிலும் அருமையாக நடித்திருக்கிறார். இளமை தோற்றத்தில் அவருடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. இவருடைய மனைவியாக அபிராமியும், காதலியாக திரிஷாவும் வருகிறார்கள். சண்டை காட்சிகளில் எல்லாம் கமல் தூள் கிளப்பி இருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் சிம்பு தன்னுடைய நடிப்பின் மூலம் அடடா என்று மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு நடித்திருக்கிறார்.
கமலுடன் அவர் வரும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை கணக்கசிதமாக செய்திருக்கிறார்கள். படத்திற்கு
பக்க பலமே ஏ.ஆர் ரகுமான் உடைய இசை தான். பாடல்களுமே பிரமாதமாக இருக்கிறது. ஆனால், கதைகளும் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் விறுவிறுப்பையும் சுவாரசியத்தையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தில் நடிகர்கள் இருக்கிறார்கள் தவிர அவர்களுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. சில காட்சிகள் முன்கூடியே யோசிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.
வழக்கமான கேங்ஸ்டர் கதை என்றாலும், கமல்ஹாசன் என்ற ஆளுமையை சரியாக பயன்படுத்தி வித்தியாசமான கதைக்களத்தில் படத்தை நகர்த்தி, மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடையே வேலை வாங்கிய விதம் அருமை. விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.