’பரமசிவன் பாத்திமா’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Vimal Sayadevi, MS Baskar, Esakki Karvannan, M Sukumar, Cool Suresh, Mahendrian, Aadhira, Sriranjani, Majojkumar, Seshvitha, VR Vimalraj, Kadhal Sukumar, Aaru Bala, Veerasamar, Kalavani Kalai
Directed By : Esakki Karvannan
Music By : Deepan Chakravarthy
Produced By : Lakshmi Creations – Esakki Karvannan
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விமல். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பரமசிவன் பாத்திமா. இந்த படத்தில் கலையரசன், சாயா தேவி, கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை கார்வண்ணன் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமம் இருக்கிறது. இங்கு மதப் பிரச்சினையால் 3 கிராமங்களாக பிரிந்து இருக்கிறது. கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதற்கிடையே ஹீரோ விமல், ஹீரோயின் சாயாதேவி காதலிக்கிறார்கள். பின் இந்த கிராமங்களை சேர்ந்த இரண்டு இளைஞர்களை விமல் மற்றும் சாயாதேவி சேர்ந்து கொலை செய்கிறார்கள்.
அதோடு சிலரை கொலை செய்யவும் முயற்சிக்கிறார்கள். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். இன்னொரு பக்கம் கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விமல்- சாயா தேவி எதற்காக கொலை செய்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சனை? எதற்காக மத கலவரம் ஏற்படுகிறது? என்பதுதான் படத்தின் உடைய நீதி கதை.
மதப் பிரச்சனையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். ரொம்ப கான்ட்ரவரசியான கதையை எடுத்திருப்பது பெரிய பாராட்டுக்குரிய ஒன்று தான். இந்த படத்தினுடைய டப்பிங் மூலம் காட்சிகளை நன்றாக மெருகேற்றி இருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு இடத்திலும் சளிப்பில்லாத அளவுக்கு இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். இரண்டாம் பாதி காட்டிலும் முதல் பதிவு ரொம்ப வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.
இரண்டாம் பாதியில் ஒரு பெரிய திருப்புமுனையை இயக்குனர் வைத்திருக்கிறார். அதனுடைய காட்சிகளுமே சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த கால சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஹீரோவுமே இரண்டாம் பாகத்தில் தான் மிரட்டி இருக்கிறார். சமீப காலமாகவே விமல் படங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் இவருடைய நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது. இவரை அடுத்து சாயாதேவி நம்ம பக்கத்து வீட்டுப் பெண் போலவே வந்து செல்கிறார்.
இவருக்கும் விமலுக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. இவர்கள் அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மலைப்பகுதி மற்றும் சுற்று கிராமம் என்பதால் ஒளிப்பதிவில் நேர்த்தியாக காண்பித்து இருக்கிறார்கள். பாடல்கள் பெரிதாக கவரும் வகையில் இல்லை. மத ரீதியான பாகுபாடுகள் இன்னும் நம் நாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலம் இயக்குனர் சொல்லிக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.




















