full screen background image
Search
Friday 13 June 2025
  • :
  • :
Latest Update

KALAIGNAR TV – GOWRI SERIAL சூடுபிடிக்கும் திருவிழா – எதிர்பாரத திருப்பங்களுடன் கௌரி மெகாத்தொடர்..!


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் “கெளரி”. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, எல்லைக் காளி கோவிலில், திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், திருவிழாவில் வைத்து துர்கா மற்றும் கௌரியை தீர்த்துக் கட்ட ஆவுடையப்பன் சதி திட்டம் தீட்டுகிறான்.

மறுபுறம், துர்காவை கொல்ல இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் நாள் குறிக்க, தனக்கு குறித்த நாளிலேயே சரவணப்பெருமாளின் உயிர் போகும் என துர்காவும் சபதம் செய்கிறாள்.

இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் உண்மையான துர்கா கண்விழித்து ஆவுடையப்பன் வீட்டுக்கும் வந்தால் என்ன நடக்கும்? அதே நேரத்தில், துர்கா ரூபத்தில் இருக்கும் கனகா உண்மையில் யார் என்கிற உண்மைகள் தெரிய வருமா? என்கிற எதிர்பார்ப்புகளுடன் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *