full screen background image
Search
Saturday 18 January 2025
  • :
  • :

RamyaNambisan Singing “Koothan” movie news & stills

பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இந்த பாடலை பாடிய நடிகை “ரம்யா நம்சபீன்” பாண்டிய நாடு படத்திற்கு பிறகு “கூத்தன்” என்ற திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தற்போது “கூத்தன்” இத்திரைப்படம் ஒரு நடன கலைஞர்கள் வாழ்க்கையும் துணைநடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் பின்னணியில் எடுக்கபடுகின்ற திரைப்படமாகும்.
ஹீரோவாக களம் இறங்கும் நடிகர் “ராஜ்குமார்” இவருக்கு வில்லனாக (பிரபுதேவா தம்பி) “நாகேந்திர பிரசாத்” நடிக்கிறார். ஹீரோயினாக “ஸ்ரீஜீதா”, “கிரா” மற்றும் “சோனா” புதுமுக நாயகிகள் நடிக்கின்றனர்கள், இதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் “AL.வெங்கி”
“சூரன்” மற்றும் பல கன்னட படங்களில் இசையமைப்பாளரான பனியாட்சிய இசையமைப்பாளர் “பாலாஜி” அவர்கள் இசையமைக்க துள்ளவைக்கும் குத்து கலந்த கவிஞர் “விவேகா” வரிகளில் “ஓடு ஓடு காதல் காட்டு மிராண்டி” என்ற பாடலை நடிகை மற்றும் பாடகியான “ரம்யா நம்பீசன்” நேற்று பாடினார்.

“ரம்யா நம்பீசன்” அவரது பாடும் அனுபவத்தைப் பற்றி கேட்டபோது நடிகை கூறியது ,
இசை அமைப்பாளர் பாலாஜியின் இசையில் நான் முதல் முரையாக பாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் மேலும் பல மொழிகளில் நான் பாடி இருந்தாலும் இந்தப் பாடல் வரிகளில் அமைந்துள்ள ஒரு சில வார்த்தை உச்சரிப்பை ஆரம்பத்தில் அறிந்திட சற்றே சிரமப்பட்டாலும் பாடலாசிரியர் விவேகா பாடல் ஒலிப்பதிவின் போது உடனிருந்ததால் அவரது உதவியுடன் நன்கு பாடிட முடிந்தது சில தினங்களாக தொண்டைக் கட்டு இருந்த போதும் துள்ளல் மிகுந்த இப்பாடலைப் பாடிப்பழகியதும் சோர்வு நீங்கி குரலும் வளம் பெற்று சிறப்புடன் பாடி முடித்தேன் என்று கூறினார்.
இசையமைப்பாளர் கூறியபோது, நடிகை “ரம்யா நம்பீசன்” ஒரு மாயஜால குரலைக் கொண்டிருக்கிறார், இது மந்திரம் செய்வதாக உணர்ந்தேன்,அது உண்மையில் மந்திரம் செய்தது. நிர்வாகத் தயாரிப்பளார் மனோஜ் கிருஷ்ணாவுக்கு மற்றும் நீல்கிரிஸ் முருகனுக்கு, ரம்யாவில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்பவர்களுக்காக நான் நன்றி கூறுகிறேன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *