full screen background image
Search
Saturday 11 July 2026
  • :
  • :
Latest Update

‘பெருசு’ திரைப்பட விமர்சனம்

‘பெருசு’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Vaibhav, Sunil, Niharika, Chandini, Kaarthekeyen, Bala Saravanan, Munishkanth, Redin Kingsley,VTV Ganesh, Karunakaran, Swaminathan, Dhanam, Deepa, Gajaraj, Alexis, Subatra Robert, Jeeva Balachandran

Directed By : Elango Ram

Music By : Arun Raj

Produced By : Stone Bench Films,Harman Baweja, Emberlight Studios – Kaarthekeyen S

“பெருசு” திரைப்படத்தை இளங்கோ ராம் இயக்கி உள்ளார். இப்படத்தில் வைபவ் ரெட்டி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் “டென்டிகோ” என்ற சிங்கள மொழி திரைப்படத்தின் ரீமேக் ஆகும், ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில பட்டி டிங்கரிங் வேலையை பார்த்துள்ளார்கள். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஒரு துக்கமான சூழலை நகைச்சுவையாக மாற்றி பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயன்றதா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

2 சகோதரர்களான வைபவ் மற்றும் சுனில், தங்கள் தந்தையின் மரணத்திற்கு பிறகு அவரது இறுதிச் சடங்கை நடத்த முயல்கிறார்கள். ஆனால், அதில் ஒரு எதிர்பாராத சிக்கல் வருகிறது. அவர்களது தந்தையின் உடலில் ஏற்படும் ஒரு விசித்திரமான நிலை, அவர்களை குழப்பத்திலும், நகைச்சுவை சம்பவங்களிலும் தள்ளுகிறது. இதனால், தந்தையின் நிலை வெளியில் தெரியாமல் அவரின் இறுதிச்சடங்கை நடத்தினார்களா? இல்லையா என்பதே படத்தின் கதை.

வைபவ் ரெட்டி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோரின் நகைச்சுவை கலந்த நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம். இவர்களுடன் சந்தினி தமிழரசன், நிஹாரிகா NM, முனீஷ்காந்த் போன்றவர்களும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வைபவ் மற்றும் சுனிலின் சகோதர உறவு மற்றும் அவர்களது காமெடி டைமிங்கும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. சத்திய திலகத்தின் ஒளிப்பதிவு, கதையின் நகைச்சுவை மற்றும் உணர்வு தருணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. படத்தொகுப்பு சூரிய குமரகுருவால் சிறப்பாக கையாளப்பட்டு, கதையை சீராக முன்னெடுத்து சென்றிருக்கிறது.

பாலசரவணன், முனீஷ்காந்த் ஆகியோரது கூட்டணி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகியோர் வரும் காட்சிகள் வலுக்கட்டாயமாக சிரிக்க வைக்கும்படி பார்வையாளர்களுக்கு அழுத்தும் கொடுக்கிறது.தனம், தீபா, கஜராஜ், சுவாமிநாதன், கருணாகரன் என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் தலைகாட்டிச் செல்கிறார்கள்.

இசையமைப்பாளர் அருண் ராஜின் இசை பாடல்களில் சோபிக்கவில்லை என்றாலும், பின்னணி இசை மூலம் நகைச்சுவை உணர்வை ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும், தனது வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளை உயிரோட்டத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம்.பாலாஜியின் வசனங்கள் கிரேஸி மோகனை நினைவுப்படுத்தினாலும், சில இடங்களில் சிரிப்பே வராத வசனங்களை நகைச்சுவை என்று திணிக்கவும் செய்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் இளங்கோ ராம், முகம் சுழிக்கும் ஒரு விசயத்தை எந்த ஒரு நெருடல் நெருட இல்லாமல், முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்திச் சென்றிருக்கிறார். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கடி என்ற ரீதியில் படம் பயணித்தாலும், பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது.

மொத்தத்தில், ‘பெருசு’ கதையின் Content-Concept மாற்றியிருக்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *