‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Rio Raj, Gopika Ramesh, Arunachaleswaran PA, Fouzee
Directed By : Swineeth S.Sukumar
Music By : Yuvan Shankar Raja
Produced By : YSR Films – Yuvan Shankar Raja
பெண்ணிய சிந்தினையை வெளிப்படுத்துவதாகச் சொல்லி, திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்… அதை தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரிடம் கேஷூவலாக சொல்வது என அதிர்ச்சிகளைக் கொடுத்து இருக்கிறார்கள்.
தனது இளம் வயதிலேய தாயும், தந்தையும் பிரிந்துவிட, அந்த விரக்தியில் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளில் நம்பிக்கை அற்றவராக இருக்கிறார் நாயகன். இன்னொரு புறம், இதில் எல்லாம் தீவிர நம்பிக்கை உள்ள சென்ட்டிமெண்ட் பெண்மணியாக இருக்கிறார் மனு.
இருவரும் காதலிக்கிறார்கள். நெருங்கிப் பழகுகிறார்கள். இதில் மனு கர்ப்பமாகிறார். இது மனுவின் குடும்பத்துக்கு தெரிந்து பிரச்சினை வெடிக்கிறது. இதர்கிடையே காதலர்களிடையேயும் பிளவு… இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.சீரியஸ் ரிலேஷன்ஷிப்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் வாசு (ரியோ ராஜ்). மறுபுறம், இவற்றில் எல்லாம் நம்பிக்கையுள்ளவராக இருக்கிறார் மனு (கோபிகா ரமேஷ்). இருவருக்குமிடையே காதல் மலர்ந்து, மோதல் வெடித்து, பிரிவில் முடியும் தறுவாயில், இந்த உறவால் மனு கர்ப்பமானது தெரிய வருகிறது. இதை இருவரும் எப்படிச் சமாளிக்கிறார்கள், இறுதியில் கமிட்மென்ட் உறவுகளை விரும்பாத வாசு மாறினாரா, இல்லை அதற்கு நேர்மாறாக இருக்கும் மனு மாறினாரா, இருவரும் சேர்ந்தார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியிருக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்!’ திரைப்படம்.
நாயகன் வாசுவாக ரியோ ராஜ். அடிக்கடி கோபப்படுவது, இறுதியில் தனது நிலையைச் சொல்லி காதலியிடம் அழுவது என்று கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை அளித்து இருக்கிறார். நாயகி கோபிகா ரமேஷ் காதல் காட்சிகளில் மட்டுமின்றி, தனது தன்மானத்துக்கு இழுக்கு என்று பொங்கும் காட்சிகளிலும் ஈர்க்கிறார்.நாயகன் ரீயோ ராஜின் நண்பராக வரும் அருணாச்சலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர் உள்ளிட்ட அனைவருமே இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.
பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு, அழகாக வணங்களைக் குழைத்து அளித்து ரசிக்க வைத்து இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை ஈர்க்கிறது. குறிப்பாக, அவரே பாடி இருக்கும் ‘கதவைத் திறந்தாயே’ பாடல், கூடுதல் இதம். நான்-லீனியர் பாணி திரைக்கதையை, கச்சிதமாக எடிட் செய்திருக்கிறார் தமிழரசன். நாயகன், நாயகி வீடுகள் உள்ளிட்டவற்றை உருவாக்கிய விதத்தில் ஈர்த்திருக்கிறார் கலை இயக்குநர் சிவா சங்கர்.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார், பெண்களின் உரிமை குறித்து பேசி இருப்பது சரிதான்… ஆனால் ஒரே மாதிரியான பிரச்சினைகள் – காட்சிகல் வருவது, திடீரென கதாபாத்திரங்கள் புதிது புதிதாக நுழைவது, போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை நியாயப்படுத்துவது, திருநர்களை தவறாக சித்தரிப்பது.. எல்லாவற்றுக்கும்மேலாக, படத்தின் முக்கிய பிரச்சினையான கருக்கலைப்பு குறித்த தெளிவான பார்வைஇல்லாதது… இப்படி நிறைய!குறிப்பாக, திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகும் இளம் பெண், அதை பதட்டமின்றி தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரிடம் சொல்லும் காட்சி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
“ஊர் உலகத்தில் நடக்கிறதைத்தானே காண்பிக்கிறோம்” என்று சமாளிக்கலாம்.
ஆனால் அப்படி எத்தனை சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். தவிர இது போன்ற காட்சிகள், “இதுதவறில்லை” என இளம் சிறார்களின் மனதில் பதிய வைக்குமே!
திறமையான இயக்குநர், அடுத்தடுத்த படங்களில் சமூக அக்கறையையும் மனதில் வைத்து படம் அளிக்க வேண்டும்.
























