full screen background image
Search
Saturday 18 January 2025
  • :
  • :

விஜயதசமி அன்று வெளியாகும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’..!

விஜயதசமி அன்று வெளியாகும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’..!

RK DREAM FACTORY சார்பில் D ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் KMP productions சார்பில் M புவனேஸ்வரன் மற்றும் SBM studios சார்பில் ஷாஜு C இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “நிர்வாகம் பொறுப்பல்ல”.

‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தை இயக்கி நடித்த சீ கார்த்தீஸ்வரன் அவர்கள் இத்திரைப்படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில்
லிவிங்ஸ்டன்,
இமான் அண்ணாச்சி,
பிளாக் பாண்டி,
ஆதவன்,
அகல்யா வெங்கடேசன்,
ஶ்ரீனிதி,
கோதை சந்தானம்,
அம்மன்புரம் சரவணன்,
ராதாகிருஷ்ணன்,
MR அர்ஜுன்,
மிருதுளா,
ஜெயஶ்ரீ சசிதரன்,
தீட்சண்யா,
மஞ்சு
மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மக்களை ஏமாற்றி எப்படி எல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை டார்க் காமெடி வகையில் வெளிச்சம் போட்டு காட்டும் படமாக இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. நிஜத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

சென்னை, மும்பை, காஷ்மீர், குளுமணாலி கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது..

ஶ்ரீகாந்த் தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைக்க, இசையமைப்பாளர் தேவா, சித்ரா, நடிகர் ஜெய் மற்றும் சைந்தவி ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.

சஜின் C படத்தொகுப்பு செய்கிறார். NS ராஜேஷ்குமார் ஒளிப்பதிவாளராகவும், சுரேஷ் சித் நடன இயக்குநராகவும், ஜாக்கி ஜான்சன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணி புரிகின்றனர்.

விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *