‘ராயன்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Casting : Dhanush, SJ Surya, Prakash Raj, Selvaraghavan, Sundeep Kishan, Kaalidas Jayaram, Dushara Vijayan, Aparna Balamurali, Varalakshmi Sarathkumar, Diliban, Saravanan
Directed By : Dhanu
Music By : AR Rahman
Produced By : Sun Pictures – M.Kalanithimaran
சிறுவயதில் பெற்றோரை தொலைத்த காத்தவராயன் (தனுஷ்) இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையுடன் பிழைப்புக்காக சென்னை வருகிறார். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவுகிறார் சேகர் (செல்வராகவன்). தந்தையாக இருந்து குடும்பத்தை காக்கும் ராயனுக்கு ஃபாஸ்ட் புட் கடைதான் தொழில். தம்பி மாணிக்கம் (காளிதாஸ் ஜெயராம்) கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். மற்றொருவரான முத்து (சந்தீப் கிஷன்) வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு, ஊர் சுற்றுவது அடிதடி என்பதுடன் அண்ணனின் கடைக்கும் அவ்வப்போது உதவிகரமாக இருக்கிறார். மறுபுறம் ராயன் இருக்கும் பகுதியில் உள்ள இரண்டு கேங்க்ஸ்டர்களின் ‘ரவுடி’யிசத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறது காவல் துறை. இதில் ராயன் குடும்பம் சிக்கிக் கொள்ள, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள்தான் திரைக்கதை.
ஆறிலிருந்து அறுபதுவரை, தர்மதுரை என தம்பிகளால் முதுகில் குத்தப்படும் ஹீரோ..இதில் வயிற்றிலேயே கத்தியை இறக்கிடுறாங்க. தம்பியுடையான்….
பைரவி, முள்ளும் மலரும் மாதிரி தங்கை கேரக்டருக்காக ஒரு கருப்பு வெள்ளை காட்சி. கொஞ்சம் கூட புதுமையோ, சஸ்பென்ஸோ இல்லாத காட்சி. எப்போதுமே டைட்டிலுக்கு முன்னேகருப்பு வெள்ளையில் ஒரு காட்சி வைத்தால் அது கதையின் பிற்காட்சிகளுக்கு தொடர்பு படுத்துவதாகவோ அல்லது ஹீரோ குணாதிசயத்தைக்காட்டவோ பயன்பட வேண்டும். தளபதி பட காட்சி மாதிரி. இதில் அந்த கருப்பு வெள்ளைக்காட்சியை வெட்டி விட்டாலும் படத்துக்கு பாதிப்பில்லை. பின் எதற்கு? வெளியூர் போன அப்பா, அம்மா திரும்ப வரவில்லைன்னு ஒரு காட்சி. ஓ…இதுல ஏதோ சஸ்பென்ஸ் இருக்கும்னு பார்த்தா அவங்களப்பத்தி கடைசி காட்சி வரைக்கும் தெரியவேயில்லை…
ராயன் அசுரன் சிவசாமி. ராயனின் தம்பி சந்தீப் கிஷன் கென் கருணாஸ் சிதம்பரம். கென் போலவே சந்தீப் கேரக்டர் ஏட்டிக்குப்போட்டியாக எதையாவது செய்வது தான் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.
ராயன் கஷ்டப்பட்டு வளர்த்த தம்பி செய்ற சேட்டையைப்பார்த்தா ராயா..இவனை வளர்த்ததுக்காய்யா இந்த முறுக்கு முறுக்குறே… …சந்தீப் கிஷன் மேல் நமக்கு கலவையான எண்ணமே வருகிறது. தர்மதுரையில் ரஜினி தம்பியின் மீது நமக்கு ஒரு வெறுப்பு வரும். இதில் சில காட்சிகளில் தனுஷை விட சந்தீப் மேல் அனுதாபம் வருகிறது. இது இயக்குனரின் வீழ்ச்சி.
நீங்கள் ஒரு கடைக்கு போகிறீர்கள். அந்தக்கடையை விலைக்கு வாங்கத் தோன்றுகிறது. அவனிடம் கேட்கிறீர்கள். அவன் உடனே உங்களை பீர் பாட்டிலால் தாக்குகிறான். நீங்கள் இந்திய நாட்டு சட்டப்படி போலீஸ் உதவியை நாடுகிறீர்கள். போலீஸ் அவனை கைது செய்கிறது. இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கும் உங்களை அவனின் அண்ணன் கேஸை வாபஸ் வாங்கவில்லையென்றால் உங்களை கொன்று விடுவதாக மிரட்ட நீங்கள் பயநந்து போய் கேஸை வாபஸ் வாங்குகிறீர்கள். அந்த மிரட்டிய அண்ணன் தான் ஹீரோ என்றால்…..இந்தக்கதை மகா குழப்பம் தானே….
ராயன் ஏன் உம்முன்னு இருக்கான்…ராயன் ஏன் மொட்டைத்தலையோடு இருக்கான்னு நாம நினைக்கக்கூடாதுன்னு படத்துல டயலாக் வச்சி பதில் சொல்றாங்க. ஆனா அழுத்தமேயில்லை.
நடிகனாக ஜெயித்தாலும், ஒரு இயக்குனராக தனுஷ் பல காட்சிகளில் தோற்று போகிறார். Flashback காட்சிகளில் தனுஷ் மட்டும் இல்லையே…தம்பிகளும் தானே இருக்கின்றனர். தனுஷின் பாசம் அவர்களுக்கு இருக்காதா?.
ஒரு போலீஸ் அதிகாரி பிரகாஷ் ராஜ். அந்த ஊருக்கு அதிகாரியாக வருகிறார். அங்கு இருக்கும் இரண்டு கேங்குகளும் அமைதியாக நான்கைந்து வருடங்களாக இருக்கின்றன. அப்போ நல்ல சட்டம் ஒழுங்கு தானே…ஆனா பிரகாஷ் ராஜ் ‘ரெண்டு குரூப்பையும் மோத வைக்க வேண்டும்….” என நினைப்பது எதற்கு என புரியவில்லை. அதுவும் பாரில் பலர் மோதி இறந்து கிடக்க இவர் மறைந்து வந்து பார்ப்பதாக காட்டுவதெல்லாம்…..இவர் போலீஸ் தானா?. இதில் ரொம்பக்கொடுமை தனுஷையும், சூர்யாவையும் சேர்த்து வைக்க மீட்டிங் வைப்பது…
எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒட்டாத கேரக்டர். பேட்டை ரௌடிகளின் தலைவனாக ஏற்க முடியவில்லை. சின்ன வீட்டை கடத்தி காரியத்தை சாதிக்கும் அரதப்பழசான ஐடியா…இயக்குனர் தனுஷ்…நீங்களுமா?
ராயன் தங்கை, தம்பிகளோடு சென்னைக்கு வருகிறான். படம் முடிந்து சென்னையை விட்டு வெளியேறும் போது தம்பிகளை அவனே கொன்றிருக்கின்றான். உசுரே நீ தானே தங்கையின் கற்பும் போய், கல்யாணமும் போய்…ராயன்…இதானா உன் ஹீரோயிஸம்…? இவ்ளோ குத்து வாங்கியும் தம்பிக்கு பிறந்த குழந்தையை தூக்கி வளர்க்க வேறு ஊருக்கு போகிறார் தனுஷ். ஒரு வேளை ராயன்-2ல அவன் கத்தியால குத்துவானோ?
என்ன எடுப்பது?எதை எடுப்பது என்பதில் இயக்குனர் தனுஷ் ரொம்பவே தடுமாறுகிறார். அசுரன் படத்தில் சிவசாமி தனுஷ் ஒரு வெறியாட்டம் ஆடுவார். கதையோடு இருக்கும். இதில் படம் முழுக்க ஆக்ஷன் தான். ஆனால் தம்பிகளையே வில்லனாக்கியது எடுபடவில்லை.
செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷிணி, அபர்ணா பாலமுரளி எல்லோருமே பயன்படுத்தப்படவில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் இருக்காரா?…பாடல்களைத்தவிர…
அசுரனை நினைத்து ராயனை இடித்த கதை போல…..


















