’வெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளன” – ராஜீவ் மேனன்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார். இப்போது ‘வெப்பன்’ திரைப்படத்தில் இன்னுமொரு அசரடிக்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் இந்தப் படம் ஜூன் 7, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“இயக்குநர் குகன் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது கதையின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, தெளிவு மற்றும் சரியான நோக்கம் இதையெல்லாம் என்னால் உணர முடிந்தது. இந்தக் கதையில் ஒரு வலுவான கதாபாத்திரத்திற்காக அவர் என்னை அணுகியது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், இந்த கதாபாத்திரத்தை பல முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்புவார்கள் என்பது எனக்குத் தெரியும். கதை மிகவும் உறுதியானதாக இருக்கும்போது நடிகர்களின் நடிப்புத் திறன் இன்னும் சிறப்பாக வெளிப்படும் என்பதை ‘வெப்பன்’ நிரூபித்துள்ளது. புதிய கால தொழில்நுட்பத்துடன் ஏஐ டெக்னாலஜியை சரியாக உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. ’வெப்பன்’ பார்வையாளர்களுக்கு உற்சாகமான மெய்சிலிர்க்க வைக்கும் பல தருணங்களைக் கொண்டுள்ளது. ஜூன் 7 முதல் திரையரங்குகளில் படத்தை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
’வெப்பன்’ திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் மில்லியன் ஸ்டுடியோ படத்தைத் தயாரித்துள்ளது. சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வெப்பன்’ படத்தில் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா எடிட்டிங், கலை இயக்குநர் சுபேந்தர் பி.எல். மற்றும் ஆக்ஷன் சுதேஷ் கையாண்டுள்ளார்.’
“Weapon has lots of Exciting and Goosebump moments” – Rajeev Menon
Cinematographer-turned-actor Rajeev Menon has become the cynosure of film enthusiasts as they admire his screen presence and commendable performance in ‘Viduthalai Part 1’. He is now all set to enthrall them with his yet another striking performance in Guhan Senniappan’s ‘Weapon’, a Sci-Fi Action Thriller based on ‘Superhuman’ starring Sathyaraj in the lead role. The film is all set for its arrival in the theaters on June 7, 2024.
“When Guhan narrated the script, I could feel his confidence, clarity, and vision at the right tempo. Moreover, I was surprised that he approached me for a powerful role, which he could have easily impressed the popular artistes, thereby getting them onboard,” smilingly says Rajeev Menon, who has bagged a pivotal character in this movie. He adds, “When the writing is so substantial, it eventually contributes in escalating the performance level of actors, which will be evident with ‘Weapon’. It’s a movie made with new-age technology with proper usage of AI technology. Weapon has lots of exciting and Goosebumps moments for the audiences. I believe and hope that they will enjoy the movie in theaters from June 7.”
Weapon is written and directed by Guhan Senniappan and is produced by Million Studio. While Sathyaraj plays the lead role, Weapon has a promising bunch of actors like Vasanth Ravi, Rajeev Menon, Tanya Hope, Rajeev Pillai, Yashika Aannand, Mime Gopi, Kaniha, Gajaraj, Syed Subhan, Baradwaj Rangan, Veluprabhakaran, Maya Krishnan, Shiyas Kareem, Benito Franklin, Raghu Esakki, Vinothini Vaidyanathan, Meghna Sumesh and many others.
Ghibran is composing the music and Prabhu Raghav is handling cinematography for this movie, which features editing by Gopi Krishna, Art by Subendar P.L, and action by Sudesh.