full screen background image
Search
Sunday 8 September 2024
  • :
  • :
Latest Update

சன்னி லியோன் ஷோவுக்கு திடீரென வந்த ஊர்வசி ரவுத்தேலா.. இந்த வார ஸ்ப்ளிட்ஸ்வில்லா X5 எப்படி இருந்தது?

Guests, Dance-offs and Drama: Urvashi Rautela’s Entry and Sunny Leone’s Advice Shake Up MTV Splitsvilla X5:ExSqueeze Me Please in an Exhilarating Episode!
In the latest episodes of MTV Splitsvilla X5: ExSqueeze Me Please, emotions run high as the Splitsvillains navigate new twists and challenges. After an intense dome session, Rushali is left feeling worried about Harsh. The villa gets chaotic when Harsh returns arm-in-arm with his ex-squeeze and introduces wildcard entry, Shubhi leaving everyone baffled.

Best friends Rushali and Shubhi’s reunion is tense. Shubhi confronts Rushali for prioritizing love over friendship, accusing her of breaking the girl code. Their heated exchange leaves their friendship hanging by a thread. Harsh questions Rushali’s motives, asking if she’s here for the game or for love. Rushali admits she came for the game but now wants to be with Harsh, creating more uncertainty.

The next morning, the Splitsvillains prepare for the dance-off challenge. Urvashi Rautela makes a dazzling entrance, ready to judge the performances and shake things up. Will these Splitsvillains dazzle the stage with their dance or with their conflicts? Rushali and Harsh’s chemistry outshines that of Harsh and Shubhi, boosting Rushali’s confidence.

As dawn breaks, the contestants must choose two Lit Couples from the dance-off winners. Tension fills the air as they decide who to vote for. Arriving at the challenge location, the Splitsvillains are greeted by the King and Queen of Hearts, Tanuj and Sunny. Sunny Leone emphasizes the need to consider both emotions and game strategy, saying, “Yeh aapke liye difficult tha ya easy? Cause you don’t just have to think about your emotions behind it, aapko game ke baare mein bhi sochna padega.” The unique challenge involves two nets on either end of a swimming pool. The selected Lit couples become team captains, each choosing two more couples. The boys sit in boats while others push and pull to score goals, followed by the girls diving in.

The aftermath brings a storm of emotions. Harsh and Rushali feel betrayed by friends who didn’t vote for them, straining trust. Shubhi hints at a new connection with Lakshay. Meanwhile, Dev Karan’s desire to connect with Shubhi leads to a confrontation with Ameha. Kashish is displeased with Addy talking to Shubhi, adding to the chaos.

To know what alliances will form or shatter next, stay tuned to MTV Splitsvilla X5: ExSqueeze Me Please Saturday, Sunday at 7pm on MTV and JioCinema simultaneously.

சன்னி லியோன் ஷோவுக்கு திடீரென வந்த ஊர்வசி ரவுத்தேலா.. இந்த வார ஸ்ப்ளிட்ஸ்வில்லா X5 எப்படி இருந்தது?

மும்பை: எம் டிவி மற்றும் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 15 நிகழ்ச்சி தமிழ் மொழியிலும் இந்த முறை ஒளிபரப்பாகி நம்ம ஊர் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து வருகிறது. பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களை பார்த்து பொழுதுபோக்கி வரும் ரசிகர்கள் சன்னி லியோன் தமிழில் தொகுத்து வழங்கும் டேட்டிங் ஷோ என்றால் பார்க்காமல் சும்மா விடுவார்களா என்ன? என்பது போலத்தான் அந்த நிகழ்ச்சிக்கு ஓடிடி ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு குவிந்து வருகிறது.

காதலர்களுக்கு இடையே நடக்கும் அன்பு, சந்தேகம், சண்டை, பிரேக்கப் என ஏகப்பட்ட உணர்ச்சிகளுடன் விளையாடும் இந்த ரியாலிட்டி ஷோ ரசிகர்களை ஒவ்வொரு எபிசோடையும் பார்க்கத் தூண்டுகிறது. கடந்த வாரம் ஹர்ஷ் ருஷாலியை விட்டு விட்டு தனியாக காதல் குகைக்கு சென்றார்.

அங்கே அவருடைய முன்னாள் காதலியான சுபி உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார். வெளியே தனியாக காதலரை பிரிந்து நின்று கொண்டிருந்த ருஷாலி சன்னி லியோனிடம் காதல் குகையில் வேறு ஏதாவது பெண்ணுடன் தனது காதலர் கனெக்‌ஷன் கொடுத்து விடுவாரோ என நினைத்து வருத்தப்பட்ட நிலையில், காதலி தான் முக்கியம் என்றும் முன்னாள் காதலியின் காதலை ஏற்க முடியாது எனக் கூறிய ஹர்ஷ் மேடைக்கு தனது முன்னாள் காதலியுடன் கை கோர்த்து வந்து ருஷாலியை மேலும், அதிர்ச்சியடைய வைத்தார். அதன் பின்னர் ஹர்ஷ் ருஷாலியைத் தான் விரும்புகிறார் என்பதை அறிந்து ருஷாலி மன நிம்மதி அடைந்தார்.

சுபி மற்றும் ருஷாலி இருவரும் மீண்டும் தங்கள் நட்பையும் புதுப்பித்துக் கொண்டனர். ருஷாலி கேம் ஆட வந்தாரா? அல்லது லவ் பண்ண வந்தாரா என ஹர்ஷ் கேட்க, முதலில் கேம் ஆடத்தான் வந்தேன். ஆனால், தற்போது உங்களுடைய காதல் தான் வேண்டும் எனக் கூற ஹர்ஷும் ஹேப்பியாகி விட்டார்.

இதற்கு இடையே இந்த வார லேட்டஸ்ட் எபிசோடில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா திடீரென ஸ்ப்ளிட்ஸ்வில்லா X5 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து போட்டியாளர்களுக்கு சில புதிய போட்டிகளை அரங்கேற்றி நிகழ்ச்சியை வேறலெவல் எண்டர்டெயின்மெண்ட்டுக்கு கொண்டு சென்றார். போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றிப் பெற்றது யார் என்பதை அறிவிக்க கிங் ஆஃப் ஹார்ட்ஸ் தனுஜ் விர்வானி மற்றும் குயின் ஆஃப் ஹார்ட்ஸ் சன்னி லியோன் மாலை நேரத்தில் வந்து போட்டியாளர்களை சந்தித்தனர். கடைசியாக நீச்சல் குள போட்டி ஒன்றை வைத்து வெற்றியாளரை முடிவு செய்ய நினைத்த நிலையில், ஹர்ஷ் மற்றும் ருஷாலி ஜோடிக்கு அவரது நண்பர்கள் ஓட்டுப் போடாத நிலையில், அவர்கள் வெற்றிப் பெறவில்லை. இதனால், ஸ்ப்ளிட்ஸ்வில்லாவில் புதிய சர்ச்சைகளும் குழப்பங்களும் வெடிக்கத் தொடங்கி உள்ளன.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எம் டிவி மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் மாலை 7 மணிக்கு கண்டு ரசிக்கலாம். ஒவ்வொரு வாரமும் ரசிகர்களை கவரும் விதமாக ஏகப்பட்ட கண்களுக்கு குளிர்ச்சியான போட்டிகளும் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *