full screen background image
Search
Sunday 8 September 2024
  • :
  • :
Latest Update

Filmmaker Ananda Krishnan’s Directorial Metro Shirish-Bobby Simha-Yogi Babu starrer ‘Non-Violence’ Releasing Soon!

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும் திரைப்படம் “நான் வயலன்ஸ்” விரைவில் திரையில் !!

AK PICTURES நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரிப்பில், மெட்ரோ படப்புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படத்திற்கு “நான் வயலன்ஸ்” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

90 களின் மதுரை மாநகரைச் சுற்றி, இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் மதுரையின் சிறைக்குள் நடக்கும், பெரும்பாலான சம்பவங்களை மையமாக வைத்து, சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன். மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் இப்படமும் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

90களின் காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால், அந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டுவரப் படக்குழு பெரும் உழைப்பைக் கொட்டியுள்ளது. அந்தகாலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், இடமென ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டு, திரையில் கொண்டுவந்துள்ளது படக்குழு. இக்கால தலைமுறைக்கு ஒரு புதுமையான திரை அனுபவமாக இப்படம் இருக்கும்.

நடிகர் மெட்ரோ ஷிரிஷ் , பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அதிதி பாலன், கருட ராம், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

தொழில்நுட்ப குழு

எழுத்து, இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன்
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் – N S உதயகுமார்
எடிட்டர் – ஸ்ரீகாந்த் N B
தயாரிப்பாளர் – லேகா ( AK PICTURES )
மக்கள் தொடர்பு – சதீஷ் குமார்

Filmmaker Ananda Krishnan’s Directorial Metro Shirish-Bobby Simha-Yogi Babu starrer ‘Non-Violence’ Releasing Soon!

The film “Non Violence” is a fresh venture bankrolled by AK PICTURES Lekha, with renowned director Ananda Krishnan of ‘Metro’ fame helming it. The film, starring Metro Shirish, Bobby Simha, and Yogi Babu in prominent roles, this project promises to captivate audiences with its unique storyline.

The film’s narrative unfolds in the city of Madurai during the 90s. Director Ananda Krishnan has crafted a captivating screenplay that primarily revolves around the events occurring within Madurai prison during that era. There is great anticipation for director Ananda Krishnan to achieve a hat-trick of successes with this film, following the consecutive triumphs of ‘Metro’ and ‘Kodiyil Oruvan’.

The film, given that the narrative takes place in the 1990s, the production crew has dedicated significant resources to authentically recreate that era on screen. Every detail, from the props and wardrobe to the filming locations, has been meticulously curated to transport viewers back in time. This film promises to offer a fresh cinematic experience for contemporary audiences.

The star-cast includes Metro Shirish, Bobby Simha, & Yogi Babu in the titular characters with Aditi Balan, Garuda Ram, Aditya Kathir and many others in the pivotal characters.

The shooting of the film is nearing its final stage. Soon the details about the teaser and trailer of the film will be announced officially. The film is releasing in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi languages.

Technical Crew

Written & directed by Ananda Krishnan
Music – Yuvan Shankar Raja
Cinematography – N S Udayakumar
Editor – Srikanth N B
Producer – Lekha (AK PICTURES)
Public Relations – Sathish Kumar




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *