full screen background image
Search
Monday 21 April 2025
  • :
  • :

‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட விமர்சனம்

‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட ரேட்டிங்: 3/5

சந்தானம் நடிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் இன்று இங்க நான் தான் கிங்கு படம் வெளியாகி உள்ளது. இதன் ட்ரெய்லர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் சந்தானமும் பயங்கரமாக புரமோஷன் செய்திருந்தார்.

அதன் பலனாக தற்போது படத்தை பார்த்தவர்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதன்படி இப்படம் சந்தானத்துக்கு வெற்றியா தோல்வியா என்பதை விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

மேட்ரிமோனியில் வேலை பார்க்கும் சந்தானத்திற்கு 25 லட்சம் கடன் இருக்கும். அதை அடைக்க முன் வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் நினைப்பார்.

ஸ்கோர் செய்த சந்தானம்
அப்போது ஜமீன் குடும்பத்தை சேர்ந்த ஹீரோயின் இதற்கு சம்மதித்து திருமணமும் நடக்கும். ஆனால் அதன் பிறகு தான் சந்தானம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.

பின்னர் கொடுத்த கடனை கேட்டு டார்ச்சர் செய்யும் மேனேஜர் சந்தானத்தின் குடும்பத்தால் இறந்து விடுவார். அந்த கொலையை மறைக்கும் குடும்பத்திற்கு மற்றொரு ஷாக் காத்திருக்கும்.

அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? சந்தானத்தின் கடன் பிரச்சனை தீர்ந்ததா? என்பதை நகைச்சுவை பாணியில் சொல்லி இருக்கின்றனர். இதற்கு முன்பு வெளிவந்த சந்தானத்தின் படங்களில் காமெடி சற்று குறையாக இருந்தது.

ஆனால் அதை எல்லாம் இப்படத்தின் மூலம் அவர் பூர்த்தி செய்து விட்டார். மீண்டும் தன்னுடைய வழக்கமான காமெடியில் சந்தானம் அசத்தி இருக்கிறார். அதேபோல் படத்தில் இருக்கும் மற்ற கேரக்டர்களும் நகைச்சுவையை வாரி வழங்கியுள்ளனர்.

அதிலும் சந்தானத்துடன் தம்பி ராமையா, பால சரவணன் அடிக்கும் லூட்டி வேற லெவல் காமெடி. ஹீரோயினை பொறுத்தவரை கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

ஆனால் படத்திற்கு மற்றொரு ஹீரோ என்று சொல்லும் வகையில் இமான் பின்னணி இசை, பாடல்கள் மூலம் ஸ்கோர் செய்துள்ளார். அதிலும் மாயோனே பாடல் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக உள்ளது.

மொத்தத்தில் இந்த “நான் தான் இங்கு கிங்கு” படத்துக்கு போய் என்ஜாய் பண்ணலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *