full screen background image
Search
Sunday 8 September 2024
  • :
  • :
Latest Update

Makkal Selvan Vijay Sethupathi’s ‘VJS 51’ First Look and Title Teaser Releasing this evening!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘VJS 51’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியீடு!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘VJS 51’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மலேசியா நாட்டில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. மேலும் மலேசியாவில் இதுவரை படபிடிப்பு நடைபெறாத பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதால்.. படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

Makkal Selvan Vijay Sethupathi’s ‘VJS 51’ First Look and Title Teaser Releasing this evening!

The makers of Makkal Selvan Vijay Sethupathi’s upcoming film tentatively titled ‘VJS 51’ have announced that the First Look and Title Teaser will be launched this evening.

Filmmaker Aarumuga Kumar of ‘Oru Nalla Naal Paarthu Soldren’ fame is directing this yet-to-be-titled movie, featuring Vijay Sethupathi as the content-driven protagonist. Rukmini Vasanth is playing the female lead role in this movie, which has an ensemble star cast of Yogi Babu, B.S. Avinash, Divya Pillai, Bablu, Rajkumar, and many other prominent actors. Karan Bhagathur Rawat is handling cinematography and Justin Prabhakaran is composing music for this film. A.K. Muthu is overseeing art direction, and R. Govindaraj takes care of editing. The film, an entertainer is produced in grandeur by 7Cs Entertainment.

The film has been completely shot across exotic locales of Malaysia. Currently, the postproduction work is briskly progressing, and the makers are delighted to launch the film’s first look and title teaser this evening.

It is worth mentioning that many fans in Malaysia thronged at the shooting spot, exhibiting their unconditional love and affection for ‘Makkal Selvan’ Vijay Sethupathi, which became viral with photos on social media and the internet. Besides, the film has been shot in never-before locations in Malaysia, which has escalated the expectations.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *