full screen background image
Search
Saturday 27 June 2026
  • :
  • :
Latest Update

‘ரெய்டு’ திரைப்பட விமர்சனம்

‘ரெய்டு’ திரைப்பட விமர்சனம்

Casting : Vikram Prabhu, Sri Divya, Ananthika Sanilkumar, Rishi Rithvik, Hareesh Peradi, Soundararaja, Daniel Annie Pope, Velu Prabhakaran

Directed By : Karthi

Music By : Sam C. S.

Produced By : S. K. Kanishk, G. Manikannan

நடிகர் விக்ரம் பிரபு நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ரெய்டு.இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.2018ம் ஆண்டு சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த ‘தகரு’ என்ற கன்னட படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இந்த படம். டெரர் போலீஸ் அதிகாரியான பிரபாகரன் (விக்ரம் பிரபு) தனது எல்லைக்குள் ரவுடிகளே இருக்க கூடாது என்று அவர்களை தீவிரமாக வேட்டையாடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள் இணைந்து அவரது காதலியை (ஸ்ரீதிவ்யா) கொன்று விடுகிறார்கள். அதற்கு நாயகன் எப்படிப் பழிவாங்குகிறார் என்பதே படத்தின் கதை.

டெரர் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு தன் பங்கை சிறப்பாக செய்கிறார். அவரது உயரமும், தோற்றமும் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஆனால் வலுவில்லாமல் இஷ்டத்துக்கு சுற்றும் திரைக்கதையால் அவரது நடிப்பும் கவனிக்கப்படாமல் போகிறது. போதைக்கு அடிமையான இளம் பெண்ணாக நடித்திருக்கும் அனந்திகா, வில்லன்களாக வரும் ரிஷி ரித்விக், சௌந்தர்ராஜா, டானி, வேலு பிரபாகரன் ஆகியோர் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள். பல வருட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதிவ்யா மீண்டும் வந்திருக்கிறார். கடைசி 30 நிமிடங்கள் விக்ரம் பிரபு காதலியாக வந்து வில்லன்களால் கொல்லப்பட்டு விடுகிறார்.

என்றாலும் அதே ஊதா கலரு ரிப்பன் அழகை அப்படியே வைத்திருக்கிறார்.‘நான் சும்மா வந்தா விருந்தாளி, உன்னைப் பார்க்க வந்தால் நீ காலி’, ‘எல்லாரும் சொந்தக் காலில் நிக்கிறாங்க. நீ போன் கால்ல நிக்கிற’, ‘ஆண்டவன் உன் தலையெழுத்தை பென்ல எழுதி இருக்கலாம். ஆனா நான் கன்ல(துப்பாக்கி) எழுதுவேன்’, ‘ஆம்பளன்னா ரத்தம் இருக்கணும், அது சுத்தமா இருக்கணும்’ இப்படி ஏகப்பட்ட மொக்கையான பன்ஞ் டயலாக்கை எழுதியிருக்கிறார் முத்தையா. கதிரவனின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு அதிரடியான பின்னணி இசையால் விறு விறுபை கூட்டியிருக்கிறார் சாம் சிஎஸ். மனதை வருடும் பாடல்கள் அழகு. படத்தின் காட்சிகளை கட்சிதமாக கண்முன் காட்டுகிறது கதிரவனின் ஒளிப்பதிவு.

விக்ரம் பிரபுவின் நடிப்பு பயணத்தில் இந்த படம் குறிப்பிடத்தக்க படமாக இருக்கும் என எதிர்ப்பாக்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *