full screen background image
Search
Sunday 31 May 2026
  • :
  • :

Madurai Manikuravar Movie Review

காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிப்பில் ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமார், மாதவிலதா, காளையப்பன், சுமன், ராதாரவி, சரவணன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மதுரை மணிக்குறவன்’

மதுரையில் உள்ள மார்கெட்டில் குறைந்த வட்டிக்கு தொழிலாளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலும் செய்து வருகிறார். ஹரிக்குமார் ( தண்டல் மணி ) மார்க்கெட் மக்களிடம் அதிகம் வட்டிக்கு பணம் வாங்கும் காளையப்பனுடன் மோதல் ஏற்படுகிறது மார்கெட்டில் நடக்கும் தகராறில் ஆரம்பித்து, குளத்தை மீனுக்காக ஏலம் எடுக்கும் வரையிலும் ஹரிக்குமாருக்கு ஏரியா எம்.எல்.ஏ சுமன் மற்றும் சாராய வியாபாரி சரவணனுடன் மோதல் தொடர்ந்து நடக்கிறது.

ஹரிக்குமாருக்கும் அவரது மாமன் மகளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் .சுமனின் சூழ்ச்சியால் திருமணம் நின்றுவிட, நாயகி மாதவிலதாவை திருமணம் செய்ய கொள்கிறார் ஹரிக்குமார். இந்நிலையில் சுமன், சரவணன் மற்றும் காளையப்பன் மூவரும் சேர்ந்து ஹரிக்குமாரை கொலை செய்து விடுகின்றனர். ஹரிக்குமாரை போன்றே உருவம் கொண்ட ஒருவர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி சேருகிறார். இறுதியில் இன்ஸ்பெக்டராக வந்த ஹரிகுமார் யார்? என்பதே ‘மதுரை மணிக்குறவன்’ படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஹரிக்குமாருக்கு இரு வேடங்களில் நடித்திருக்கிறார். வட்டி பணம் வசூல் செய்யும் கதாபாத்திரத்தில் அற்புதமாக பொருத்தியிருக்கிறார். தனது அண்ணனை கொன்றவர்களை பழிவாங்கும் இன்ஸ்பெக்டர் என இரண்டு பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.ஆக்‌ஷன் காட்சியில் கவனத்தை ஈர்க்கிறார். நாயகி மாதவிலதா பார்ப்பதற்கு அழகாக இருக்கீறார். நடிப்பில் அசத்திருக்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் சுமன், சரவணன் மற்றும் காளையப்பன் மூவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையில், மனசுல பெரிய வந்தான் மதுரக்காரன். பாடல் கேட்கும் ரகம். மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை திரைக்கதை வடிவில் அனைவரும் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜரிஷி

மொத்தத்தில் ‘மதுரை மணிக்குறவன்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்

நடிகர்கள் : இயக்கத்தில் ஹரிக்குமார், மாதவிலதா, காளையப்பன், சுமன், ராதாரவி, சரவணன், எம் எஸ் பாஸ்கர்

இசை : இளையராஜா

இயக்கம் : ராஜரிஷி

மக்கள் தொடர்பு : வெங்கட்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *