full screen background image
Search
Thursday 23 July 2026
  • :
  • :
Latest Update

Kushee Ravi Wins Best Actor (Female) Critics Regional at NEXA Indian Streaming Academy Awards 2026

NEXA Indian Streaming Academy Awards 2026-ல் சிறந்த நடிகைக்கான (Critics – Regional Series) விருதை வென்றார் குஷீ ரவி

மும்பை, ஜூலை 19, 2026:
புகழ்பெற்ற நடிகை குஷீ ரவி, Zee5 Original தொடரான ‘அய்யனா மனே’ (Ayyana Mane)-இல் தனது சிறப்பான நடிப்பிற்காக, NEXA Indian Streaming Academy Awards 2026 விழாவில் ‘Best Actor – Series (Female) – Critics Regional’ விருதைப் பெற்றுள்ளார்.

விருதைப் பெற்ற பின்னர் குஷீ ரவி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதாவது:

“இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறேன். ‘அய்யனா மனே’ தொடரில் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது என் கலைப் பயணத்தின் மிகவும் அர்த்தமுள்ள அனுபவங்களில் ஒன்றாகும். இந்த விருதுக்காக என்னைத் தேர்வு செய்த விமர்சகர்கள் மற்றும் நடுவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. Zee5, எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், என்னுடன் நடித்த சக நடிகர்கள் மற்றும் இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய முழு படக்குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமாக, என் நடிப்பை அன்புடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து ஊக்கமளித்த பார்வையாளர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. இந்த விருது, இனி வரும் காலங்களிலும் அர்த்தமுள்ள கதைகளில் என்னை மேலும் சவாலுக்கு உட்படுத்தி சிறந்த நடிப்பை வழங்கும் ஊக்கமாக இருக்கும்.”

இந்த விருது, குஷீ ரவியின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. ‘அய்யனா மனே’ தொடரில் அவர் வெளிப்படுத்திய ஆழமான, இயல்பான மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பு, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தின் மூலம், இந்திய திரைப்பட உலகிலும் OTT தளங்களிலும் திறமையான மற்றும் பல்துறை நடிப்புத் திறன் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவராக குஷீ ரவி தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

Kushee Ravi Wins Best Actor (Female) Critics Regional at NEXA Indian Streaming Academy Awards 2026

Mumbai, July 19, 2026: Acclaimed actress Kushee Ravi has been honored with the Best Actor – Series (Female) – Critics Regional award at the prestigious NEXA Indian Streaming Academy Awards 2026 for her compelling performance in the Zee5 original series Ayyana Mane.

Receiving the award, Kushee Ravi expressed her heartfelt gratitude:

“I am truly overwhelmed and deeply grateful to receive this recognition. Playing this character in Ayyana Mane has been one of the most enriching experiences of my career. My sincere thanks to the critics, the jury, Zee5, our director, producers, writers, my incredible co-stars, and the entire crew who made this journey so memorable. Most importantly, I thank the audience for embracing my performance with so much love and encouragement. This award motivates me to continue challenging myself and bringing meaningful stories to life.”

The recognition marks another significant milestone in Kushee Ravi’s career, celebrating her dedication to portraying powerful and emotionally resonant characters. Her performance in Ayyana Mane has been widely appreciated by both critics and audiences for its depth, authenticity, and emotional impact.

With this prestigious honor, Kushee Ravi continues to establish herself as one of the most promising and versatile performers in Indian cinema and the OTT space.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *