full screen background image
Search
Saturday 18 July 2026
  • :
  • :
Latest Update

‘அன்பே டயானா’ திரைப்பட விமர்சனம்

‘அன்பே டயானா’ திரைப்பட ரேட்டிங்: 3/5

நடிகர்கள் :

பாரி இளவழகன் – சிருமாமில்ல சீதா கிருஷ்ணா
ரம்யா ரங்கநாதன் – மேஜிக் கோன்சால்வ்ஸ்
சேத்தன் – சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர்
ரோஜா செல்வமணி- சரளா
பரிதாபங்கள் கோபி – பெங்களூர் பாபா
செல் முருகன் – மங்கபாபு
நிகிலா சங்கர் – தனிஷா
இஸ்மத் பானு – சத்தியவதி
சுதர்சன் காந்தி – சிருமாமில்ல சிரஞ்சீவி சங்கர்

தொழில்நுட்பக் குழு:

பேனர்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் & Era Entertainment
தயாரிப்பு நிறுவனம்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் & Era Entertainment
தயாரிப்பாளர்கள்: சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன்
எழுதி, இயக்கி, நிகழ்த்தியவர்: பாரி இளவழகன்
இசை: பரத் சங்கர்
DOP: ஷெல்லி கேலிஸ்ட்
படத்தொகுப்பு : பார்த்தா MA
கலை இயக்குனர்: மகேந்திரன்
இணை தயாரிப்பாளர்: டி நரேன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: ஷாஜன் கவிதா, விவேக் சுவாமிநாதன் ஆர்
நிர்வாக தயாரிப்பாளர்: அஜித்குமார் நடராஜன்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: குட் நைட் ஆர் நாகராஜன்
தயாரிப்பு நிர்வாகி: எஸ் மணிகண்டன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: பாபா மணி
ஒலி வடிவமைப்பு & கலவை: டி உதய் குமார் (ஒலி அதிர்வு)
ஒலி வடிவமைப்பு: ரஞ்சித் வேணுகோபால், சரவண குமார்
ஆடை வடிவமைப்பாளர்: அபிநந்தினி எம்
தலைமை ஒப்பனை கலைஞர்: F. சசி குமார்
சண்டைக் காட்சி: டான் அசோக்
VFX: RENDERHOOD, ஆனந்தராஜ் ஆர்
டிரெய்லர் AI ஷாட்ஸ்: டிஜிபிரிக்ஸ் என்டர்டெயின்மென்ட்
வண்ணம்: கௌஷிக் கே எஸ் (ஸ்டுடியோ ஸ்பேஸ் மாங்க்)
இணை இயக்குனர்கள்:ராகுல் பாலாஜி, ராகேஷ்
இயக்கும் குழு: கார்த்திக் வீரபாகு, ஐ.ராஜன், தினேஷ், எம்.ராஜன், விஷ்ணு
ஸ்டில்ஸ்: வி பாலாஜி
விளம்பர ஸ்டில்ஸ்: பெனுநந்தா
விளம்பர வடிவமைப்பாளர்: கௌதம் ஜே
படைப்பு விளம்பரங்கள்: வெங்கட் ரமணன், ராஜசேகர்
தலைப்பு வடிவமைப்பு: Yedhu
மக்கள் தொடர்பு : யுவராஜ்

‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இந்த முறை முற்றிலும் மாறுபட்ட ஜாலியான காதல் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார். சென்னை பெரம்பூரை பின்னணியாக கொண்டு நகரும் இந்த படம், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மிகவும் இயல்பாக பதிவு செய்கிறது ‘அன்பே டயானா’.

கல்லூரி காலம் முதல் ஆங்கிலோ இந்திய பெண்ணான டயானாவை ஒருதலையாக காதலித்து வரும் பாரி, பல வருடங்களாக காத்திருந்த பிறகு அவளிடம் இருந்து காதலுக்கு சம்மதம் கிடைக்கிறது. ஆனால் அந்த நேரத்தில்தான் தனது அம்மாவின் எதிர்ப்பும் குடும்ப சூழ்நிலையும் காரணமாக அந்த காதலை ஏற்க முடியாமல் தவிக்கிறார். இந்த குழப்பம் எப்படி முடிகிறது என்பதையே படம் நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் சொல்லுகிறது.

நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். காதலுக்காக ஏங்கும் இளைஞனாகவும், அம்மாவிடம் காதலை சொல்ல முடியாமல் பயந்து தவிக்கும் மகனாகவும் தனது கதாபாத்திரத்தை எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி ரம்யா ரங்கநாதன் ஆங்கிலோ இந்திய பெண்ணாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆங்கிலம் கலந்த சென்னை தமிழை அவர் பேசிய விதமும், நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகளில் கொடுத்த நடிப்பும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் ரோஜா, கண்டிப்பான அம்மா கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அதேபோல் சேத்தன், குடும்ப தலைவனாகவும் அன்பான தந்தையாகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். பரிதாபங்கள் கோபி வரும் காட்சிகள் எல்லாமே அரங்கையே சிரிப்பால் அதிர வைக்கின்றன. மற்ற துணை நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஷெல்லி கேலிஸ்டின் ஒளிப்பதிவு பெரம்பூரின் அழகை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறது. பரத் சங்கரின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு தேவையான உணர்வை சரியாக கொடுக்கின்றன. படத்தொகுப்பும் இரண்டாம் பாதியில் நல்ல வேகத்தை கொடுக்கிறது.

முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், இடைவேளைக்கு பிறகு படம் முழுவதும் வேகம் பிடிக்கிறது. குறிப்பாக கடைசி அரை மணி நேரம் தொடர்ந்து சிரிக்க வைக்கும் காட்சிகளும், குடும்ப உணர்வுகளும், சிறிய திருப்பங்களும் படத்தை இன்னும் ரசிக்க வைக்கின்றன. சாதி, மதம், மொழி போன்ற வேறுபாடுகளை தாண்டி மனிதர்களை அன்பு ஒன்றிணைக்க முடியும் என்ற கருத்தையும் எந்த போதனையும் இல்லாமல் எளிமையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில், ‘அன்பே டயானா’ காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வு ஆகிய மூன்றையும் சமநிலையாக கலந்து, மனநிறைவு தரும் அனுபவத்தை இந்த படம் வழங்குகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *