full screen background image
Search
Tuesday 28 April 2026
  • :
  • :
Latest Update

நீண்ட நாள் வாழ.. சிரித்து மகிழ.. கலைஞர்டிவியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி“தில்லு முல்லு”

நீண்ட நாள் வாழ.. சிரித்து மகிழ.. கலைஞர்டிவியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி“தில்லு முல்லு”

ஒருவரை கோபப்படுத்த சில நிமிடங்கள் போதும். ஆனால், ஒருவரை சிரிக்க வைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது நம் சான்றோர் மொழி. அந்த வகையில், எந்திர வாழ்க்கையில் உலாவும் ஒவ்வொருவரையும் சிரிக்க வைக்க கலைஞர் தொலைக்காட்சியில் “தில்லு முல்லு” என்ற நகைச்சுசை நிகழ்ச்சி திங்கள் – வெள்ளி வரை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நட்சத்திரங்களான சிங்கப்பூர் தீபன், முல்லை, கோதண்டம், கூல் சுரேஷ் மற்றும் அன்னலட்சுமி ஆகியோர் தங்களது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

சிரிக்காத நாட்கள் வாழ்க்கையின் வீணடிக்கப்பட்ட நாட்கள் என்றும், சிரிப்பின் நீளமே வாழ்நாளின் நீளம்என்றும் முன்னோர் கூற கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே,சிரியுங்கள், வாழ்க்கையை வளமானதாக மாற்றுங்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *