full screen background image
Search
Friday 24 April 2026
  • :
  • :
Latest Update

‘பைக்கர்’ திரைப்பட விமர்சனம்

‘பைக்கர்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Sharwanand, Rajasekhar, Malvika Nair, Atul Kulkarni

Directed By : Abhilash Reddy

Music By : Ghibran Vaibodha

Produced By : UV Creations – V. Vamsi Krishna Reddy, Pramod Uppalapati

‘பைக்கர்’ கதை முழுக்க ஒரு அப்பா மகன் உறவை மையமாக வைத்து நகர்கிறது. ராஜசேகர் ஒரு முன்னாள் ரேசரும் பயிற்சியாளரும், தனது மகன் சர்வானந்த் மூலம் இந்தியாவை உலக ரேசிங் லெவலுக்கு கொண்டு போகணும் என்று கனவு காண்றார். அந்த கனவை நம்பிக்கையோடு வளர்த்த மகன் ஒரு கட்டத்தில் ரேசிங்கையே விட்டுட்டு போயிடுறது கதைக்கு முக்கிய திருப்பம். பிறகு ஏன் அவன் அந்த முடிவு எடுத்தான், மீண்டும் ரேசிங்குக்கு வருகிறானா, அப்பாவின் நம்பிக்கையை நிறைவேற்றுகிறானா என்பதுதான் படம்.

சர்வானந்த் இந்த படத்துக்காக ரொம்ப உழைத்திருப்பது தெளிவா தெரியும். ஒரு ரேசராக அவன் உடல் மொழி, லுக், ஆக்டிங் எல்லாம் நன்றாக வேலை செய்திருக்கிறது. எமோஷனல் சீன்ஸ்லவும் நன்றாக ஸ்கோர் பண்றார். ராஜசேகர் ரொம்ப மிதமான ஆனால் வலுவான நடிப்பை கொடுத்து படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். அப்பா மகன் சீன்ஸ்ல இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு.

மாளவிகா நாயர் கதாபாத்திரம் சுமாராக இருந்தாலும், சில இடங்களில் நல்ல உணர்ச்சியை கொடுக்கிறாள். ஆனா அவங்க ட்ராக் கொஞ்சம் கிளிஷே மாதிரி தான் தோன்றும். அதுல இன்னும் கொஞ்சம் ஆழம் இருந்திருக்கலாம்.

டெக்னிக்கலாக படம் ரொம்ப ஸ்ட்ராங். குறிப்பாக ரேசிங் சீன்ஸ் எல்லாம் செம்மையாக எடுத்திருக்காங்க. கேமரா வேலை, எடிட்டிங், சவுண்ட் டிசைன் எல்லாமே அந்த ரேஸ் காட்சிகளை ரொம்ப ரியலாகவும், பரபரப்பாகவும் காட்டுகிறது. ஜிப்ரான் பின்னணி இசை இந்த ஆக்ஷன் சீன்ஸ்க்கு பெரிய பலம். கிளைமாக்ஸ் ரேஸ் சீன் குறிப்பாக சீட் எட்ஜ்ல உட்கார வைக்கும் மாதிரி இருக்கும்.

ஆனா கதை பாத்தா புதுசா எதுவும் இல்ல. பல ஸ்போர்ட்ஸ் படங்களில் பார்த்த மாதிரி தான் போகும். முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும், சில சீன்ஸ் நீளமாக இருக்கும். சில இடங்களில் ஹீரோக்கு எல்லாமே எளிதா கிடைக்கிறது போல தோன்றும். இன்னும் கொஞ்சம் ரியலிஸம் இருந்திருந்தா படம் இன்னும் உயர்ந்திருக்கும்.

மொத்தத்தில், ‘பைக்கர்’ கதை சற்று வழக்கமானதுதான் ஆனாலும், ஸ்போர்ட்ஸ் படங்களை விரும்புறவர்களுக்கு ஒரு சரியான என்டர்டெய்னிங் படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *