‘அதர்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Casting : Aditya Madhavan, Gowri Kisha, Anju Kuriyan, Nandu Jagan, Munishkanth, R.Sundarajan, Mala Parvathy
Directed By : Abir Hariharan
Music By : Ghibran
Produced By : Grand Pictures
படம் ஒரு விபத்தோட துவங்குது.
சாலையில் திட்டமிட்டு வாகனத்தை தடுக்குறாங்க. அந்த வாகனத்தில் இருந்த மூன்று பெண்களும் ஒரே ஆணும் விபத்துல சாவுறாங்க. போலீசார் விசாரணை தொடங்குறாங்க — ஆனா அதுல ஒரு அதிர்ச்சி தகவல்: அந்த மூன்று பெண்களும் பார்வையற்றவர்கள்!
அதுக்கு மேல, அவர்கள் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது. இதிலிருந்து கதை திசை மாறி, மர்மம் மேல மர்மமா திரளுது.
விசாரணை ஒரு கருத்தரிப்பு மருத்துவமனை வரை போய்ச் சேருது. அங்கே IVF (In Vitro Fertilization) முறையில நடக்குற மோசடிகள், சட்டவிரோத கருவுறுதல், ஸ்டீராய்டு மருந்துகள், ஊழல் — எல்லாமே ஒன்றுக்கு ஒன்று பிணைந்திருக்கும். அந்த மருத்துவமனையின் பின்னால இருக்குற நபர் யார்? அந்த விபத்து நடந்ததுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
இந்த கேள்விகளுக்குத்தான் படம் பதில் சொல்லுது. இறுதியில் வரும் திருப்பம் – “அவன் தான் குற்றவாளி?”ன்னு பார்வையாளரை ஆச்சரியப்படுத்தும் மாதிரி இருக்கு.
மொத்தத்தில் இந்த “அதர்ஸ்” ஒரு வித்தியாசமான மெடிக்கல் கிரைம் திரில்லர். பெரிய ஹீரோயிசம் இல்லாம, நேர்த்தியா சொல்லப்பட்ட மர்ம கதை.விசாரணை கதைகளும் சஸ்பென்ஸ் திருப்பங்களும் பிடிக்குறவங்க இதை நிச்சயம் ரசிப்பாங்க.





















