‘வட்டக்கானல்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Thuruvan Mano, Meenakshi Govind, RK Suresh, Vidya Pradeep, Vijay TV Sarath, Kabali Vishwanth, Muruganandam, Fathima Babu,
Directed By : Pithak Pugazhenthi
Music By : Maris Vijay
Produced By : MPR Films, Skyline Cinemas – A.Mathizhagan, Veerammal, RM Rajesh
“வட்டக்கானல்” கொடைக்கானல் காட்டுப் பின்னணியில் எடுக்கப்பட்ட குற்றம், பழிவாங்கல் கலந்து இருக்கும் ஒரு படம்.
கொடைக்கானலிலே ஒரு “வட்டக்கானல்”ன்னு அழகான மலைப் பகுதி இருக்கு. அந்த இடத்துல “மேஜிக் மஷ்ரூம்”ன்னு ஒரு போதைக் காளான் வளரக்கூடும். அதைப் பயிரிட்டு நிறைய பணம் சம்பாதிக்கிறவன் தான் ஆர். கே. சுரேஷ். அந்த பகுதி முழுக்க அவனோட கட்டுப்பாட்டுல தான் இருக்கும். அவன் ஆதரவில்லாத மூணு சிறுவர்களை வளர்த்து, தன்னோட பக்கபலமாக வச்சிருக்கிறான் — துருவன் மனோ, விஸ்வந்த், விஜய் டிவி சரத். இவங்க எல்லாரும் அவனை “அப்பா”ன்னு தான் அழைப்பாங்க. அவனுக்காக எதையும் செய்யத் தயார். இதே நேரத்தில், வித்யா பிரதீப்ன்னு ஒரு பெண், சுரேஷ் தன்னோட கணவனை கொன்றதுக்காக பல வருடங்களா பழிவாங்கத்தான் காத்திருக்கிறாங்க.
அப்புறம் மீனாட்சி கோவிந்தராஜன்ன்னு ஒரு பெரிய ஸ்டேட் வைத்திருக்கும் பெண், அவங்க சொத்துகளை அங்க வேலை பார்க்கும் ஏழைகளுக்கே பிரிச்சு கொடுக்கணும் என்கிற ஆசையில இருக்கிறாங்க. ஆனா சுரேஷ் அந்தச் சொத்தை அபகரிக்க நினைக்கிறான்.
இதுல துருவன் மனோவுக்கும் மீனாட்சிக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. இதே தான் கதையோட முக்கிய திருப்பு.
ஒரு நேரத்துல சுரேஷ் தன்னோட மகன்களையே சந்தேகிக்கிறான். அதுக்கப்புறம் கதையில சண்டை, பழிவாங்கல், துரோகம் எல்லாம் கலக்கலா வரும்.
மீனாட்சியின் முயற்சி வெற்றியா?
வித்யா பிரதீப் பழிவாங்க முடியிறாரா?
சுரேஷுக்கு என்ன ஆகுது? — அதுதான் படத்தின் மீதிக் கதை.
ஆர். கே. சுரேஷ் – எப்போதும் போல மிரட்டலான தோற்றத்துல, எதிர்மறை பாத்திரத்துக்கேற்ற மாதிரி நல்லா நடித்திருக்கிறார்.
துருவன் மனோ – சற்று எடை கூடியிருந்தாலும், பாத்திரத்துக்கு பொருத்தமா இருக்கார். கொஞ்சம் எடையைக் குறைச்சா இன்னும் நன்றாக வருவார்.
மீனாட்சி கோவிந்தராஜன், வித்யா பிரதீப், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வினோதினி எல்லாரும் தங்கள் அளவுக்கு சரியான நடிப்பு கொடுத்திருக்காங்க.
ஒளிப்பதிவும் இசையும் சராசரியாக தான் இருக்கு. மலைப்பகுதி காட்சிகள் ரொம்ப அழகா இருக்கு, ஆனா இன்னும் அந்த இயற்கை அழகை காமிக்கலாம்னு தோணும்.கதை முழுக்க ஒரு இருண்ட உணர்வோட தான் போகுது.
“வட்டக்கானல்” ஒரு மலைப்பகுதி பின்னணியில் எடுக்கப்பட்ட குற்றம், துரோகம், பழிவாங்கல் கலந்த படம்.
சில நல்ல காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
ஆனா கதை சொல்லும் விதத்தில கொஞ்சம் ஆழம் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
மொத்தத்துல இந்த “வட்டக்கானல்” ஒரு மிதமான கிரைம் திரில்லர்…



















